செம்ம கடுப்பில் Redmi ரசிகர்கள்! ஏனெனில் கேட்டது ஒன்னு.. கிடைச்சது ஒன்னு!

|

உண்மையை சொல்ல வேண்டும் என்றால், ஒரு பிராண்ட் எவ்வளவு பிரபலம் என்பதை அறிய பெரிய-பெரிய ஆய்வறிக்கைகள் எதுவும் தேவைப்படாது.

மக்கள் ஒரு குறிப்பிட்ட பிராண்ட்டின் தயாரிப்புகளை எவ்வளவு அதிகமாக பயன்படுத்துகிறார்கள் என்பதை வைத்தே, அந்த பிராண்ட்டின் 'லெவல்' என்ன என்பதை பற்றி நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

ஏனெனில் "அதிகமாக பயன்படுத்தப்படுகிறது" என்றால் அது "அதிகமாக நம்பப்படுகிறது" என்று அர்த்தம்; இந்த கான்செப்ட் ரொம்ப சிம்பிள்!

அந்த கான்செப்ட்டின் கீழ் ரெட்மி.. தரமான இடத்துல இருக்கு!

அந்த கான்செப்ட்டின் கீழ் ரெட்மி.. தரமான இடத்துல இருக்கு!

அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்கிற கான்செப்ட்டின் கீழ், ரெட்மி நிறுவனத்தை அடுத்த நோக்கியா என்றே கூறலாம் (அதாவது "அந்த காலத்து" நோக்கியாவை சொல்கிறோம்; தற்கால ஸ்மார்ட்போன்களை அல்ல!)

அப்படியான ரெட்மிக்கு, சரியான போட்டியாளராக ரியல்மி நிறுவனத்தை கூறலாம். ஆகமொத்தம் யாருமே இங்கே நிரந்தரமான ராஜா கிடையாது, தவறு செய்தால் சறுக்கல் நிச்சயம்!

Redmi செய்த

Redmi செய்த "முதல்" தவறு!

ரியல்மி (Realme) போன்ற போட்டியாளர்களை வைத்துக்கொண்டு, சீனாவில் ரெட்மி பிராண்டிங்கின் கீழ் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வேறு பெயரின் கீழ், அதுவும் போக்கோ பிராண்டிங்கின் கீழ் அறிமுகம் செய்தது - உண்மையிலேயே தரமான வியாபார தந்திரம் தான்.

ஆனால் ரெட்மி நிறுவனம், அதன் கே சீரீஸின் மீது கை வைத்திருக்க கூடாது!

OnePlus 10T விலை: தாறுமாறு.. அப்போ தாராளமா வெயிட் பண்ணலாம்!OnePlus 10T விலை: தாறுமாறு.. அப்போ தாராளமா வெயிட் பண்ணலாம்!

டாப் கியரில் போன வண்டிக்கு டக்குனு பிரேக் போட்டது போல!

டாப் கியரில் போன வண்டிக்கு டக்குனு பிரேக் போட்டது போல!


ரெட்மி கே சீரீஸ்-க்கு இந்தியாவில் பெரிய அளவிலான ரசிகர்கள் இருந்தனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், ரெட்மி கே20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் பட்டையை கிளப்பின.

ஆனால் திடுதிப்பென்று ரெட்மி கே30 ஆனது அதே பெயரில் வராமல் போக்கோ எக்ஸ்2-வாக இந்தியாவில் அறிமுகமானதும், டாப் கியரில் போன வண்டிக்கு டக்குனு பிரேக் போட்டது போல ஆகிவிட்டது!

இது மிகப்பெரிய தவறு என்று கூறிவிட முடியாது என்றாலும், நிச்சயம் ஒரு ட்ரா-பேக் தான்!

ரெட்மியின் அடுத்த சொதப்பல்?

ரெட்மியின் அடுத்த சொதப்பல்?

முதல் தவறை சரி செய்யும் நோக்கத்தின் கீழ், அதாவது இந்தியாவில் கே சீரீஸ் ஸ்மார்ட்போன்களை நிறுத்தியது தவறு என்று புரிந்துகொண்ட ரெட்மி நிறுவனம், அதன் கே சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அதே பெயரின் கீழ் மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்தது.

அந்த அறிவிப்பை தொடர்ந்து, சமீபத்தில் சீனாவில் அறிமுகமான கே50 சீரீஸ் மாடல்கள் (Redmi K50, Redmi K50 Pro) தான் இந்தியாவிற்கு வரவுள்ளது என்கிற எதிர்பார்ப்பு எகிறியது.

ஆன்லைனில் Free ஆக CIBIL ஸ்கோர் பார்ப்பது எப்படி? ஓ.. இப்படி ஒரு வழி இருக்கோ!ஆன்லைனில் Free ஆக CIBIL ஸ்கோர் பார்ப்பது எப்படி? ஓ.. இப்படி ஒரு வழி இருக்கோ!

தற்போது அந்த எதிர்பார்ப்பிற்கு

தற்போது அந்த எதிர்பார்ப்பிற்கு "செம்ம அடி" ஒன்று விழுந்துள்ளது!

அது என்னவென்றால், இந்தியாவில் அறிமுகமாகும் கே சீரீஸ் மாடல் ஆனது கே50 அல்லது கே50 ப்ரோ இல்லையாம். அது Redmi K50i 5G தானாம்!

ரெட்மி கே50ஐ ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஜூலை 20 ஆம் தேதியன்று, இந்தியாவில் அறிமுகமாகும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் கே50 ப்ரோ மாடலை எதிர்பார்த்த சில இந்திய ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது!

இருந்தாலும் கூட Redmi K50i 5G அவ்ளோ மொக்கை இல்ல!

இருந்தாலும் கூட Redmi K50i 5G அவ்ளோ மொக்கை இல்ல!

வாங்கினால் கே50 ப்ரோ தான் வாங்குவேன் என்று அடம் பிடிப்பவர்களுக்கு வேண்டுமானால் இது ஏமாற்றமாக இருக்கலாம். ஆனால் உண்மையில் கே50ஐ ஒரு நல்ல போன் தான்.

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்; Redmi K50i 5G ஆனது Redmi Note 11T Pro ஸ்மார்ட்போனின் "மறுபெயரிடப்பட்ட" எடிஷனாக கூட இருக்கலாம்!

அதாவது இது 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் டால்பி விஷன் ஆதரவுடன் 6.6-இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி+ ஐபிஎஸ் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கலாம். உடன் MediaTek Dimensity 8100 சிப்செட், 64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 16எம்பி செல்பீ கேமரா, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,080mAh பேட்டரி போன்ற அம்சங்களையும் எதிர்பார்ககலாம்.

இந்தியாவில் அறிமுகமான 50-இன்ச் OnePlus TV; விலையை சொன்னா நம்புவீங்களா?இந்தியாவில் அறிமுகமான 50-இன்ச் OnePlus TV; விலையை சொன்னா நம்புவீங்களா?

எதிர்பார்ப்புகள் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், ரெட்மி என்ன சொல்லுது?

எதிர்பார்ப்புகள் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், ரெட்மி என்ன சொல்லுது?

இந்தியாவில், வருகிற ஜூலை 20 ஆம் தேதி K50i அறிமுகம் செய்யப்படும் என்று Redmi நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ட்வீட் செய்துள்ளது.

மேலும் ரெட்மி K50i 5G ஆனது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் (6ஜிபி + 128ஜிபி மற்றும் 8ஜிபி + 256ஜிபி) வருகிற ஜூலை 22 முதல் விற்பனைக்கு வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கலர் ஆப்ஷன்களை பொருத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் ஃபாண்டம் ப்ளூ, ஸ்டீல்த் பிளாக் மற்றும் குயிக் சில்வர் என்கிற 3 விருப்பங்களில் வரும் என்றும் கூறப்படுகிறது.

ஒருவேளை ரெட்மி நிறுவனம் முதலில் கே50ஐ மாடலை அறிமுகம் செய்து, அதற்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸ்-ஐ பொறுத்து, அடுத்தடுத்த மாதங்களில் கே50 மற்றும் கே50 ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்யலாம். யாருக்கு தெரியும்? பொறுத்திருந்து பார்ப்போம்!

Photo Courtesy: Mi.com

Best Mobiles in India

English summary
Redmi is all set to launch its K50i in India on July 20 Sale starts on July 22 But Fans Expect K50 Pro

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X