Home
News

மடமடவென விலை குறைப்பு.. Redmi Pad ரூ.12000.. OnePlus.. Xiaomi.. Realme..டேப்லெட்கள் மீதும் பிரைஸ் கட்..

இந்த தருணத்தில் நீங்கள் ஸ்மார்ட்போன் (Smartphone) வாங்கும் ஐடியா வைத்திருந்தால், அதை உடனே கைவிட்டுவிடுங்கள். அதற்கு பதிலாக விலை சரிவில் விற்பனை செய்யப்படும் புதிய டேப்லெட் (Tablet) சாதனங்களை வாங்கி பயன்பெறுங்கள். ரூ.12,000 முதல் இப்போது டேப்லெட் வாங்கலாம்.

இந்திய டேப்லெட் சந்தையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சத்தமே இல்லாமல் முன்னணி பிராண்டுகளான ரெட்மி (Redmi), சியோமி (Xiaomi), ஒன்பிளஸ் (OnePlus), ரியல்மி (Realme) போன்ற பிராண்டுகளில் இருந்து விற்பனை செய்யப்படும் டேப்லெட் சாதனங்கள் மீது விலை குறைப்பு (price cut on tablet device) அறிவிக்கப்பட்டுள்ளது.

மடமடவென விலை குறைப்பு.. Redmi Pad ரூ.12000.. உடனே அள்ளிக்கோங்க..

இப்போது உங்கள் கையில் வெறும் ரூ.12,000 இருந்தால் போதும், உடனே ஒரு புத்தம் புது டேப்லெட் சாதனத்தை உங்களால் சொந்தமாக்க முடியும். சரி, இப்போது எந்த டேப்லெட் சாதனத்தை என்ன விலையில் வாங்கலாம் என்று பார்க்கலாம் வாங்க.

1. ரெட்மி பேட் (Redmi Pad):
சியோமி நிறுவனத்திடம் இருந்து வாங்க கிடைக்கும் இந்த ரெட்மி பேட் டேப்லெட் சாதனம் இப்போது ரூ.13,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. HDFC பேங்க் கார்டு மற்றும் ICICI வாடிக்கையாளர்களுக்கு ரூ.1500 இன்ஸ்டன்ட் தள்ளுபடியம் கிடைக்கிறது. இதன் மூலம் வெறும் ரூ.12,499 விலையில் புது டேப்லெட் வாங்கலாம். இது 3ஜிபி ரேம் + 64ஜிபி மாடலின் விலையாகும்.

- 10.6" இன்ச் 2K டிஸ்பிளே (display)
- மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் (MediaTek Helio G99 SoC)
- 8000mAh பேட்டரி (battery)
- 18W ஃபாஸ்ட் சார்ஜிங் (fast charging)
- குவாட் ஸ்பீக்கர் உடன் டால்பி அட்மாஸ் (Quad speakers tuned by Dolby Atmos)

2. சியோமி பேட் (Xiaomi Pad):
இந்த டேப்லெட் சாதனம் ரூ.26,999 விலையில் இருந்து ரூ.24,999 விலைக்கு சரிவை கண்டுள்ளது. இத்துடன் 5% கூடுதல் சலுகை ஒன்கார்டு (OneCard credit card) பயனர்களுக்கு கிடைக்கிறது. இது ஜியோமார்ட் (JioMart) வழியாக வாங்க கிடைக்கிறது.

- 11" WQHD+ டிஸ்பிளே
- 120Hz ரெஃப்ரஷ்க் ரேட் (refresh rate)
- ஸ்னாப்டிராகன் 860 சிப்செட் (Snapdragon 860 chipset)
- 13MP ரியர் கேமரா மற்றும் 8MP செல்பி கேமரா (camera)
- 6ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் (storage)

மடமடவென விலை குறைப்பு.. Redmi Pad ரூ.12000.. உடனே அள்ளிக்கோங்க..

3. ரியல்மி பேட் (Realme Pad):
இந்த டேப்லெட் சாதனம் இப்போது ரூ.13,397 என்ற விலைக்கு சரிவை கண்டுள்ளது. இதன் அசல் விலை ரூ.24,999 என்பது குறிப்பிடத்தக்கது.
- 10.4″ இன்ச் டிஸ்பிளே
- மீடியாடெக் ஹீலியோ ஜி90 கேமிங் சிப்செட் (MediaTek Helio G80 gaming processor)
- 7100mAh பேட்டரி உடன் 18W குவிக் சார்ஜிங் (quick charging)
- குவாட் டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர் (Quad Dolby Atmos speakers)

4. ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go):
அதிக சக்தி வாய்ந்த லேட்டஸ்ட் டேப்லெட் சாதனமாக இந்த ஒன்பிளஸ் பேட் கோ இருக்கிறது. இதன் மீது பெரிய விலை குறைப்பு இல்லையென்றாலும், 7 வங்கிகளின் சலுகை கிடைக்கிறது. அதிகபட்சமாக ரூ.2000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதன் தற்போதைய விலை ரூ.19,999 ஆகும். சலுகைக்கு பிறகு, ரூ. 17,999 விலைக்கு கிடைக்கிறது.

- 11.35" இன்ச் LCD டிஸ்பிளே
- 90Hz ரெஃப்ரஷ் ரேட்
- மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் (MediaTek Helio G99 processor)
- 8ஜிபி RAM + 128ஜிபி ROM
- 8MP கேமரா
- 8000mAh பேட்டரி
- 33W பாஸ்ட் சார்ஜிங் (fast charging)
- டால்பி அட்மாஸ் குவாட் ஸ்பீக்கர் (Dolby Atmos quad speakers)

இன்னும் சிறிய டிஸ்பிளேவில் கண்களை சிரமம்படுத்தி பார்ப்பதை தவிர்த்துவிட்டு, இந்த டேப்லெட் சாதனங்களை இன்றே ஆர்டர் செய்து, பெரிய டிஸ்பிளேவில் உங்கள் விரும்பிய பொழுதுபோக்கு மற்றும் அலுவலக வேலைகளை பார்த்து மகிழுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Pad Price Gets Sudden Drop To Rs 12499 OnePlus Xiaomi Realme Pad Tablets Gets Discount In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X