ரூ.14,999க்கு Redmi Pad அறிமுகம்.. பெரிய டிஸ்ப்ளே, 8000 எம்ஏஎச் பேட்டரி என எல்லாம் வேற லெவல்!

|

10.61 இன்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் ஆதரவுடன் கூடிய ரெட்மி பேட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 8000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

ரூ.14,999 என்ற விலையில் இந்த பேட் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. கிராஃபைட் க்ரே, மின்ட் க்ரீன் மற்றும் மூன்லைட் சில்வர் வண்ண விருப்பங்களில் வெளியாகி உள்ளது. இதன் பிற அம்சங்களை பார்த்துவிட்டு இந்த சாதனத்தை வாங்கலாமா வேண்டாமா என்பதை நீங்களே தீர்மானத்துக் கொள்ளுங்கள்.

2கே டிஸ்ப்ளே ஆதரவு..

2கே டிஸ்ப்ளே ஆதரவு..

ரெட்மி பேட் இல் 8 எம்பி முன்புற மற்றும் பின்புற கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் மிகப் பெரிய பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

அதாவது இந்த பேட் இல் 8000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ரெட்மி பேட் இல் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 2கே டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்

இந்த டிஸ்ப்ளே ஆனது 400 நிட்ஸ் உச்ச பிரகாச ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த பேட் ஆனது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான எம்ஐயூஐ 13 அவுட் ஆஃப் தி பாக்ஸ் இல் இயங்குகிறது. இதில் டால்பி அட்மோஸ் உடன் கூடிய குவாட் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

விலை மற்றும் கிடைக்கும் தன்மை

விலை மற்றும் கிடைக்கும் தன்மை

ரெட்மி பேட் இந்திய விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இதன் 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.14,999 எனவும் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.17,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உச்ச வேரியண்ட் விலை

உச்ச வேரியண்ட் விலை

ரெட்மி பேட் இன் உச்சபட்ச வேரியண்ட் ஆக 6 ஜிபி ரேம் வேரியண்ட் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி பேட் சலுகை

ரெட்மி பேட் சலுகை

ரெட்மி பேட் ஆனது கிராஃபைட் க்ரே, மின்ட் க்ரீன் மற்றும் மூன்லைட் சில்வர் வண்ண விருப்பத்தில் கிடைக்கும். இந்த பேட் ஆனது அக்டோபர் 5 ஆம் தேதி காலை 10 மணி முதல் Mi.com, Flipkart, Mi Homes மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தளத்தில் வாங்குவதற்கு கிடைக்கும்.

அக்டோபர் 5 முதல் அக்டோபர் 9 வரை எம்ஐ.காம் இல் பேங்க் ஆஃப் பரோடா வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுவதாக ரெட்மி அறிவித்துள்ளது.

ரெட்மி பேட் சிறப்பம்சங்கள்

ரெட்மி பேட் சிறப்பம்சங்கள்

ரெட்மி பேட் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ரெட்மி பேட் ஆனது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான எம்ஐயுஐ 13 மூலம் இயங்குகிறது.

இதில் 10.61 இன்ச் பெரிய டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 2,000x1,200 பிக்சல்கள் தீர்மானத்துடன் கூடிய 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவு இதில் உள்ளது.

400 நிட்ஸ் உச்ச பிரகாச ஆதரவும் இதில் இருக்கிறது. இந்த டேப்லெட் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி99 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

8 எம்பி செல்பி மற்றும் ரியர் கேமரா

8 எம்பி செல்பி மற்றும் ரியர் கேமரா

ரெட்மி பேட் இல் 8 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 1080 பிக்சல் தெளிவுத்திறன் உடன் கூடிய காட்சிகளையும் இதில் பதிவு செய்ய முடியும்.

செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என இதன் முன்புறத்தில் 8 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

மைக்ரோ எஸ்டி கார்ட் மூலமாக 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

8000 எம்ஏஎச் பேட்டரி

8000 எம்ஏஎச் பேட்டரி

இதில் மிகப்பெரிய பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதாவது ரெட்மி பேட் இல் 8000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றிருக்கிறது. இதை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi Pad Launched in India at Rs.14,999 with Big Display, 8000mAh Battery and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X