Home
News

விட்றாதீங்க.. ரெட்மி டேப்லெட் மாடலுக்கு விலைகுறைப்பு.. 10.61-இன்ச் டிஸ்பிளே.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி பேட் (REDMI Pad) எனும் லேப்டாப் சாதனத்தின் விலையை தற்போது குறைத்துள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் பெரிய டிஸ்பிளே, 8000 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 3ஜிபி + 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி பேட் ஆனது ரூ.14,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு இதன் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.17,999 விலையிலும், 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.17,999 விலையிலும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மூன்று வேரியணட்களுக்கும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

விட்ராதீங்க.. ரெட்மி டேப்லெட் மாடலுக்கு விலைகுறைப்பு..

அதாவது தற்போது அறிவிக்கப்பட்ட விலைகுறைப்புக்கு பின்பு, 3ஜிபி ரேம் கொண்ட ரெட்மி பேட் மாடலை ரூ.13,999 விலையிலும், 4ஜிபி ரேம் கொண்ட மாடலை ரூ.14,999 விலையிலும், 6ஜிபி ரேம் கொண்ட மாடலை ரூ.16,999 விலையிலும் வாங்க முடியும். குறிப்பாக விலை குறைக்கப்பட்ட ரெட்மி பேட் ஆனது பிளிப்கார்ட் வாங்க தளத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும்.

10.61-இன்ச் 2கே டிஸ்பிளே வதியுடன் இந்த அசத்தலான ரெட்மி பேட் மாடல் வெளிவந்துள்ளது. பின்பு 2000 X 1200 பிக்சல்ஸ், 1 பில்லியன் கலர்ஸ் ஆதரவு, 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடலின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே வசதியுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் 8எம்பி ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி பேட். 1080 பிக்சல் தெளிவுத்திறன் உடன் கூடிய காட்சிகளையும் இதில் பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. எனவே இந்த டேப்லெட் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். அதேசமயம் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளது.

டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்ட குவாட் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி பேட். எனவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ரெட்மி பேட் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது ரெட்மி டேப்லெட். இந்த மீடியாடெக் சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேசமயம் இந்த சாதனத்தை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான எம்ஐயுஐ 13 மூலம் இயங்குகிறது.

விட்ராதீங்க.. ரெட்மி டேப்லெட் மாடலுக்கு விலைகுறைப்பு..

ஆனாலும் இந்த டேப்லெட் சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கடைக்கும் என்று கூறப்படுகிறது. 6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை மெமரி வசதி இதில் உள்ளது. பின்பு இதில் மைக்ரோ எஸ்டி கார்ட் மூலமாக 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

8000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ரெட்மி பேட் சாதனம் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இது வைஃபை ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட். அனைத்து சிறப்பு அம்சங்களுடன் கம்மி விலையில் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Pad gets price cut in India: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X