Home
News

Redmi Note 9, Redmi 9 Prime, Redmi 9i மீது தற்காலிக விலை குறைப்பு.. புது விலை இவ்வளவு கம்மியா?

சியோமி நிறுவனத்தின் சப் பிராண்ட் நிறுவனமான ரெட்மி நிறுவனம் சமீபத்தில் தனது புதிய ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்திய சில நாட்களுக்குப் பின்னர், இப்போது நிறுவனம் அதன் முந்தைய ஸ்மார்ட்போன் மாடலான ரெட்மி நோட் 9 சீரிஸின் விலையை இப்போது இந்தியாவில் தற்காலிகமாகக் குறைத்துள்ளது. இந்த விலைக் குறைப்பு ஆரம்பத்தில் மார்ச் 15 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் இப்போது இந்த சலுகை இந்த மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 9 சீரிஸ் மீது ரூ. 2,000 வரை விலை குறைப்பு

ரெட்மி நோட் 9 சீரிஸ் மீது ரூ. 2,000 வரை விலை குறைப்பு

இந்த சலுகையில் கீழ் ரெட்மி நோட் 9 சீரிஸில் உள்ள ரெட்மி நோட் 9 , ரெட்மி நோட் 9 ப்ரோ, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ், ரெட்மி 9i, மற்றும் ரெட்மி 9 பிரைம் ஆகிய மாடல்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சியோமி சேனல்கள் மற்றும் அமேசான் இந்தியாவில் இந்த அனைத்து மாதிரிகளுக்கும் சுமார் ரூ. 2,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது என்று நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மற்றும் இ-வாலெட் பயனர்களுக்கு கேஷ்பேக் போன்ற சலுகைகள் மூலம் வாடிக்கையாளர்கள் விலையை இன்னும் அதிகமாகக் குறைக்க முடியும்.

ரெட்மி நோட் 9 புதிய விலை

ரெட்மி நோட் 9 புதிய விலை

ரெட்மி நோட் 9 போனின் அடிப்படை மாடலான 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் இப்போது வெறும் ரூ. 10,999 விலையில் கிடைக்கிறது. இதன் முந்தைய விலை ரூ. 11,999 ஆகும். அதேபோல், 4 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் மாடலின் விலை இப்போது ரூ. 13,499 என்ற விலையில் இருந்து ரூ.12,999 என்ற விற்பனை விலைக்குக் குறைக்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 9 இன் டாப் வேரியண்ட் மாடலான 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் இப்போது ரூ. 13,999 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் முந்தைய விலை ரூ. 14,999 ஆகும்.

ரெட்மி 9i மற்றும் Redmi 9 பிரைம் புதிய விலை

ரெட்மி 9i மற்றும் Redmi 9 பிரைம் புதிய விலை

ரெட்மி 9i ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை ரூ. 8,299 என்ற விலையில் இருந்து இப்போது வெறும் ரூ. 7,999 என்ற விலைக்கு குறைக்கப்பட்டுள்ளது. Redmi 9 பிரைம் ஸ்மார்ட்போனின் 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் இப்போது வெறும் ரூ .9,499 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முன்னர் இது ரூ. 9,999 என்ற விலையில் கிடைத்தது. அதேபோல் இதன் மற்ற வேரியண்ட் மாடல் அதன் முந்தைய விளையான ரூ. 11.999 விலையில் இருந்து இப்போது வெறும் ரூ. 10.999 என்ற விலையில் விற்பனைக்கு கிரைக்கிறது.

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் புதிய விலை

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் புதிய விலை

அதேபோல், ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸின் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மாடல் இப்போது வெறும் ரூ. 14,999 என்ற விலையில் விலை குறைப்பிற்குப் பின்னர் கிடைக்கிறது. இதற்கு முன்பு இதன் உண்மையான விற்பனை விலையான ரூ.16,999 என்ற விலையில் இது வாங்குவதற்குக் கிடைத்தது. இது முற்றிலுமாக இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ. 2,000 தள்ளுபடியை வழங்கியுள்ளது. இதன் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.18,499 என்ற விலைக்குப் பதிலாக இப்போது வெறும் ரூ.17,499 என்ற விலைக்கு விற்பனையாகிறது.

ரெட்மி நோட் 9 ப்ரோ புதிய விலை

ரெட்மி நோட் 9 ப்ரோ புதிய விலை

கடைசியாக, ரெட்மி நோட் 9 ப்ரோவின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ. 13,999 விலையில் இருந்து இப்போது வெறும் ரூ.12,999 என்ற விலைக்கு குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இதன் 4 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் மாடல் இப்போது அதன் அசல் விலையான ரூ.15,999 விலையில் இருந்து ரூ.13,999 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த புதிய பிரதிபலிப்பு சியோமி ஆன்லைன் சேனலில் கிடைக்கிறது. இதற்கிடையில், ரெட்மி நோட் 10 மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ இந்த வாரத் தொடக்கத்தில் விற்பனைக்கு வந்தது. ரெட்மி நோட் 10 புரோ மேக்ஸ், மார்ச் 18 முதல் வாங்குவதற்குக் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Redmi Note 9 Redmi 9 Prime Redmi 9i and Redmi 9 Prime Gets Temporary Price Cuts of Up to Rs 2000 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X