இந்தியா: ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மற்றும் செக்யூரிட்டி கேமராவுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!
ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியா முழுவதும் அதிக வரவேறப்பு உள்ளது, குறிப்பாக இந்நிறவனம் பட்ஜெட் விலையில் தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரெட்மி பிராண்டு சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 7 ப்ரோ, ரெட்மி நோட் 7எஸ்,ரெட்மி 7, ரெட்மி வைய்3 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 7எஸ்:
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 4ஜிபி
ரேம் கொண்ட ரெட்மி நோட் 7எஸ் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி நோட் 7 ப்ரோ:
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி 7
3ஜிபி ரெம் கொண்ட ரெட்மி 7 மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.8,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு
2ஜிபி ரேம் கொண்ட ரெட்மி 7 மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.7,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி வ்யை3:
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்டரெட்மி வ்யை3 மாடலுக்கு ரூ.1000-விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் Miஹோம் செக்யூரிட்டி கேமரா பேசிக் மாடல் ரூ. 1,799 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications