மியூஐ 9.5 அப்டேட் பெறும் 35 சியோமி ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.!
ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் அடிப்படையிலான மியூஐ 9.5 அப்டேட் பெறப்போகும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல், இதோ.!
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி, 35க்கும் மேற்பட்ட அதன் உலகளாவிய ஸ்மார்ட்போன்களுக்கு அதன் மியூஐ 9.5 மேம்படுத்தலை உருட்டியுள்ளது. மியூஐ 9.5 ஆனது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் ஓஎஸ் அடிப்படையிலானது என்பதும், இது பல புதிய அம்சங்கள் மற்றும் பிழை திருத்தங்களை கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த புதுப்பிப்பு சுழற்சியில் மூன்று நிலைகள் உள்ளன; கூறப்பட்டுள்ள 35 சியோமி சாதனங்களில், மார்ச் மாத இறுதிக்குள் பத்து சாதனங்கள் மேம்படுத்தல் பெறும், மற்றொரு 15 சாதனங்கள் ஏப்ரல் மாத தொடக்கத்தில் புதுப்பிப்பைப் பெறும், மீதமுள்ள பத்து சாதனங்கள் ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் அப்டேட்டை பெறும். ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் அடிப்படையிலான மியூஐ 9.5 அப்டேட் பெறப்போகும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல், இதோ.!
ரெட்மி நோட் 4 (மீடியா டெக் எஸ்ஓசி), ரெட்மி 3ஸ், ரெட்மி 4 ப்ரைம், ரெட்மி நோட் 3 (ஸ்பெஷல் எடிஷன்), ரெட்மி நோட் 3 (க்வால்காம் எஸ்ஓசி, ரெட்மி நோட் 4 (க்வால்காம் எஸ்ஓசி), ரெட்மி நோட் 4எக்ஸ், ரெட்மி 4ஏ, ரெட்மி 5 பிளஸ், மி மேக்ஸ் மற்றும் மி மேக்ஸ்ப்ரைம் ஆகிய ஸ்மார்ட்போன்கள் 2018-ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் புதுப்பிக்கப்படும்.
இரண்டாவது அப்டேட் சுழற்சியில், ரெட்மி நோட் 5ஏ ப்ரைம், ரெட்மி வ்யை1, ரெட்மி நோட் 5ஏ, ரெட்மி வ்யை1 லைட், ரெட்மி 5ஏ, ரெட்மி 5 பிளஸ், ரெட்மி நோட் 5, ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி 5, மி மேக்ஸ் 2, மி 5, மி 5 ப்ரோ ரெட்மி 4எக்ஸ், மி 6 மற்றும் மி மிக்ஸ் 2 ஆகிய சாதனங்கள் ஏப்ரல் மாத தொடக்கத்தில் புதுப்பிக்கப்படும்.

இறுதியாக, மி நோட் 2, மி 5எஸ், மி மிக்ஸ், மி நோட் 3, மி 5எஸ் ப்ளஸ், ரெட்மி நோட் 2, ரெட்மி 3, ரெட்மி 4, மி 3 மற்றும் மி 4 ஆகிய ஸ்மார்ட்போன்கள் மியூஐ 9.5 அப்டேட்டை பெறும். துரதிர்ஷடவசமாக, இந்திய சியோமி ஸ்மார்ட்போன்களில் எப்போது இந்த மேம்படுத்தல் கிடைக்கும் என்பது பற்றிய வார்த்தைகள் ஏதுமில்லை.


Click it and Unblock the Notifications








