Home
News

நம்பமுடியாத சலுகையுடன் வெளிவரும் ரெட்மீ நோட் 5.!

ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்

By Prakash S

தற்சமயம் ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போன் மாடலை மி.காம் வலைதளம் மூலம் மிக எளிமையாக வாங்க முடியும், குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. 3ஜிபி ரேம் கொண்ட இக்கருவியின் விலை ரூ.9,999-ஆக உள்ளது, அதேபோன்று 4ஜிபி ரேம் கொண்ட இக்கருவியின் உண்மை விலை ரூ.11,999-ஆக உள்ளது.

நம்பமுடியாத சலுகையுடன் வெளிவரும் ரெட்மீ நோட் 5.!

ஜியோ நிறுவனம் இப்போது தெரிவித்த அறிக்கையில் ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 வரை கேஷ்பேக் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அதன்பின்பு இப்போது அறிவித்த சலுகை குறிப்பிட்ட காலம் நேரம் வரை மட்டுமே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2160 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

நம்பமுடியாத சலுகையுடன் வெளிவரும் ரெட்மீ நோட் 5.!

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு அட்டகாசமான கைரேகை சென்சார் ஆதரவுடன் இக்கருவி வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi Note 5 Available in 24-Hour Open Sale Today via Mi.com; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X