Home
News

8000mah பேட்டரியா? 200MP கேமரா.. 1TB ஸ்டோரேஜ்.. இணையத்தை உலுக்கிய Redmi Note 14 Pro Max லீக் தகவல்..

படிப்பு, வேலை என்று ஆரம்பித்து பொதுபோக்கு வரை ஸ்மார்ட்போன் இல்லாத இடம் என்று எதுவும் கிடையாது. என்ன தான் ஸ்மார்ட்போன்களுக்கு முன்னோடியாக ஐபோன்கள் (iPhone) இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் ஆண்ட்ராய்டு போன்களின் (Android phones) ஆதிக்கம் அதிகரித்துள்ளது என்றே நாம் கூறலாம்.

இதற்கு காரணம், மேல் தட்டு மக்கள் முதல், கீழ் தட்டு மக்கள் வரை பல விலை பிரிவுகளில் ஸ்மார்ட்போன்கள் மக்களை சென்று அடைந்துள்ளது. மிகவும் குறைந்த விலையில் ஆரம்பித்து பல லட்சங்கள் வரை பலதரப்பட்ட விலையில் ஸ்மார்ட்போன்களை இப்போது நாம் இந்திய சந்தையில் வாங்கலாம். இந்திய சந்தையில் பெரும் பங்கு வகிப்பவர்கள் நடுத்தட்டு மக்கள் தான்.

8000mah பேட்டரியா? 200MP கேமரா.. 1TB ஸ்டோரேஜ்.. இணையத்தை உலுக்கிய லீக்

எனவே, பெரும்பாலான தயாரிப்பு நிறுவனங்கள் ஹை-என்ட் (High-end) ஸ்மார்ட்போன்களை விட பட்ஜெட் போன்களுக்கு (budget mobile phones) தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து, இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. பட்ஜெட் என்று வந்துவிட்டால், சியோமி (Xiaomi), ரெட்மி (redmi), ரியல்மி (Realme) போன்ற நிறுவனங்களை நாம் மறக்க முடியாது.

ரெட்மி நோட் 14 ப்ரோ மேக்ஸ் (Redmi Note 14 Pro Max) ஸ்மார்ட்போன்:

இந்த வரிசையில் உள்ள புகழ்பெற்ற சீன ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ரெட்மி (Redmi) ஒரு நம்ப முடியாத ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. ரெட்மி நிறுவனம் புதிய 5ஜி ரெட்மி நோட் 14 ப்ரோ மேக்ஸ் (Redmi Note 14 Pro Max) ஸ்மார்ட்போனை இப்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள அம்சங்களை கேட்டால் நீங்களே வாய் பிளப்பீர்கள்.

8000mah பவர்ஃபுல் பேட்டரி உடன் 200MP கேமராவா?

இந்த ரெட்மி நோட் 14 ப்ரோ மேக்ஸ் சாதனம் 8000mAh பவர்ஃபுல் பேட்டரியுடன், 200 மெகாபிக்ஸல் கேமராவை கொண்டுள்ளது. குறைந்த விலையில் சிறந்த கேமரா, தரமான செயல்பாடு, அம்சங்கள் ஆகியவற்றை கொண்டு வரும் இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வரும் போன்களில் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சரி, இந்த போனின் சிறப்பம்ச விபரங்களை இப்போது பார்க்கலாம்.

எவ்வளவு பெரிய டிஸ்பிளேவை எதிர்பார்க்கலாம்?

இது 6.9' இன்ச் AMOLED டிஸ்ப்ளேயுடன் வரும். இந்த ரெட்மி நோட் 14 ப்ரோ மேக்ஸ் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் இயங்கும். இது ஆண்ட்ராய்டு 13 உடன் இயங்கும் ஆக்டா கோர் ப்ராசஸரால் (Octa core Processor) செயல்படும். இது கேமிங் (Gaming) செய்பவர்களுக்கும் ஏற்றது. இது ஒரு பெரிய சைஸ் 8000mAh பவர்ஃபுல் பேட்டரியுடன் (Powerful battery) வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரா அம்சத்தை பொருத்தவரை, இது 200MP பிரைமரி சென்சார் உடன் கூடிய ட்ரிபிள் கேமரா அமைப்பை கொண்டிருக்கும். முன்பக்கத்தில் 32MP இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இன்னும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவில்லை என்பதால், இந்தியாவில் என்ன விலைக்கு விற்கப்படும் என்பது உறுதி செய்யப்படவில்லை.

எவ்வளவு ஸ்டோரேஜ்.. என்ன விலை?

சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த சாதனம் சுமார் ரூ. 36,000 விலைக்கு இந்திய சந்தையில் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 8ஜிபி ரேம் உடன் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனாக வெளிவரும். 1TB வரையிலான எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவை கொண்டுள்ளது. இந்த 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வருவது சிறந்த டீலாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மற்றொரு லீக் தகவல் படி, இந்த ரெட்மி நோட் 14 ப்ரோ மேக்ஸ் சாதனம் 6000mah பேட்டரியை கொண்டிருக்கும் என்று கூறியுள்ளது. ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 15 ப்ரோ மேக்ஸ் சாதனம் மாடலில் 8000mah பேட்டரி மற்றும் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் அம்சம் கொண்ட கேமராக்கள் இடம்பெறும் என்றும் வதந்திகள் பரவியுள்ளது. ரெட்மியின் இந்த சாதனங்கள் எப்போது அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 14 Pro Max might launch with 200MP camera 5G mobile phone leak
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X