சம்பவம் செய்ய போகும் SALE! ரூ.20,000 பட்ஜெட்ல இப்படி 2 Redmi போன்-ஆ! 200MP கேமரா வேற! என்ன மாடல்?
ரெட்மி (Redmi) நிறுவனத்திற்கு இந்திய வாடிக்கையாளர்களை எவ்வாறு ஈர்க்க வேண்டும் என்கிற வித்தை மிகவும் நன்றாகவே தெரியும். அதற்கு மிகப்பெரிய ஆதாரம், இந்திய சந்தையில் கிட்டத்தட்ட அனைத்து ரெட்மி சீரிஸ் போன்களுக்கும் கிடைக்கும் வரவேற்பு தான். குறிப்பாக நோட் சீரிஸ் (Note Series) மாடல்களுக்கு!
அப்படியாக ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி (Redmi Note 13 Pro 5G) மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 13 Pro Plus 5G) மாடல்கள் இந்தியா மற்றும் உலக சந்தைகளில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களாக உள்ளன.

ஷாவ்மீ (Xiaomi) நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி ஏற்கனவே அதன் நோட் 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்திவிட்டது. இவைகள் கூடிய விரைவில் இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனெனில் ரெட்மி 13 நோட் சீரிஸ் ஆனது டிஆர்டிஏ (TDRA) சான்றிதழை பெற்றுள்ளன; இது உலகளாவிய வெளியீட்டை உறுதி செய்கிறது.
இதற்கிடையில் ஆபுள்ஸ் (Appuals) வழியாக கிடைத்துள்ள ஒரு பிரத்யேக அறிக்கையில், ரெட்மி நோட் 13 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஆகியவற்றின் ஐரோப்பிய விலை நிர்ணயம், ஸ்டோரேஜ் ஆப்ஷன்ஸ் மற்றும் கலர் ஆப்ஷன்ஸ் தொடர்பான விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வெளியான அறிக்கையின்படி, ரெட்மி நோட் 13 ப்ரோ மற்றும் 13 ப்ரோ பிளஸ் ஆகிய இரண்டுமே பிளாக் (Black), ப்ளூ (Blue) மற்றும் ஒயிட் (White) கலர் ஆப்ஷன்களில் வெளியிடப்படலாம். மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 12 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 512 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் அனுப்படலாம்.
ஐரோப்பிய விலையை பொறுத்தவரை, ரெட்மி நோட் 13 ப்ரோ மாடலானது 450 யூரோவிற்கும் மற்றும் 13 ப்ரோ பிளஸ் மாடலானது 500 யூரோவிற்கும் வெளியிடப்படலாம். உடனே இந்த யூரோக்களை அப்படியே இந்திய ரூபாய் மதிப்பிற்கு மாற்றிவிட வேண்டாம். ஏனென்றால் வெவ்வேறு நாடுகளில் உள்ள உள்ளூர் வேட் விகிதங்களை (Local VAT rates) பொறுத்து விலை மாறுபடும்.

எதிர்பார்க்கப்படும் இந்திய விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே சீன விலை நிர்ணயத்தோடு சற்று ஒற்றுப்போகலாம். நினைவூட்டும் வண்ணம் ரெட்மி நோட் 13 ப்ரோவின் பேஸிக் 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.17,400 க்கு அறிமுகமானது.
மறுகையில் உள்ள 13 ப்ரோ பிளஸின் 12ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.22,800 க்கும் அறிமுகமானது. இதேபோன்ற (அல்லது இதைவிட சற்றே அதிகமான) விலைகளை இந்தியாவிலும் நம் எதிர்பார்க்கலாம். ப்ரோ மாடலானது ரூ.17,000-ஐ சுற்றிய பட்ஜெட்டிலும், ப்ரோ பிளஸ் மாடலானது ரூ.23,000-ஐ சுற்றிய பட்ஜெட்டிலும் அறிமுகம் செய்யப்படலாம்.
அம்சங்களை பொறுத்தவரை. சீன வேரியண்ட்களும், இந்திய வேரியண்ட்களும் ஒரே மாதிரியான அம்சங்களையே பேக் செய்யும். ரெட்மி நோட் 13 ப்ரோ மற்றும் 13 ப்ரோ பிளஸ் ஆகிய இரண்டுமே கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு, 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் 1.5K FHD+ AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளன.
ப்ரோ பிளஸ் மாடலானது மீடியாடெக் டைமன்சிட்டி 7200 அல்ட்ரா சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, அதே சமயம் ப்ரோ மாடலானது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 2 சிப்செட்டை பேக் செய்கிறது.
கேமராக்களை பொறுத்தவரை இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவு உடனான 200எம்பி சாம்சங் ISOCELL HP3 சென்சார் + 8எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2எம்பி மேக்ரோ சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது.
இவ்விரு ஸ்மார்ட்போன்களுக்கும் இடையே உள்ள மற்றொரு வேறுபாடு, ப்ரோ பிளஸ் மாடலானது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியைகொண்டுள்ளது. மறுகையில் உள்ள ப்ரோ மாடலானது சற்றே பெரிய 5100mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, ஆனால் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.


Click it and Unblock the Notifications








