வந்துட்டான்.. வந்துட்டான்.. Redmi Note 13.. இனி மொத்த இந்தியாவும் இந்த போனை தான் வாங்க போறாங்க.. என்ன விலை?
சியோமி (Xiaomi) ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த தருணம் இதோ வந்துவிட்டது. ரெட்மி நோட் 13 (Redmi Note 13 Series) சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுகம் இன்னும் சில மணிநேரத்தில் துவங்கவுள்ளது. இந்த போனின் முக்கிய விபரங்கள் இதோ.
சியோமியின் துணை பிராண்ட் ஆன ரெட்மி வரிசையில் இன்று புதிதாக 3 ஸ்மார்ட்போன் சாதனங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதில் ரெட்மி நோட் 13 (Redmi Note 13), ரெட்மி நோட் 13 ப்ரோ (Redmi Note 13 Pro) மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் (Redmi Note 13 Pro+) ஆகியவற்றை நிறுவனம் அறிமுகம் செய்கிறது.

இது, ஜனவரி 4 ஆம் தேதி (இன்று), மதியம் 12 மணி IST மணி அளவில் ஆன்லைன் வெளியீட்டு நிகழ்வு மூலம் அறிமுகம் செய்யவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் Xiaomi இன் YouTube சேனல் மற்றும் சமூக ஊடகக் கையாளுதல்களில் லைவ் ஸ்ட்ரீமைப் (Redmi Note 13 Launch Live Streaming) பார்க்கலாம். இந்த சமீபத்திய தொடர் 200MP கேமரா, வளைந்த AMOLED டிஸ்பிளே (Display) உடன் வருகிறது.
ரெட்மி நோட் 13 ப்ரோ (Redmi Note 13 Pro):
இதில் 120W பாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் IP68 ரேட்டிங் போன்ற சிறப்பம்சங்களுடன் பட்ஜெட் பிரிவில் (Budget Segment) களமிறங்கவுள்ளது. இந்த சீரிஸ் இன் ப்ரோ மாடல் ஸ்மார்ட்போனே பட்ஜெட் விலையில் தான் எதிர்பார்க்கப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. சரி, வரவிருக்கும் ரெட்மி நோட் 13 ப்ரோ மாடலின் விலை என்னவிருக்கும்? இதன் அம்சம் எத்தகையது என்று இப்போது பார்க்கலாம்.
ரெட்மி நோட் 13 ப்ரோ (Redmi Note 13 Pro) ஸ்மார்ட்போன் ஆனது 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.67" இன்ச் உடன் 2712 x 1220 பிக்சல்கள் அடங்கிய அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1920Hz PWM டிம்மிங் ஃபிரிக்வென்ஸி போன்ற அம்சங்களும் உள்ளது.

இத்துடன், இதன் டிஸ்பிளே டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) சப்போர்ட் அம்சங்களை ஆதரிக்கிறது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் (Octa Core Snapdragon 7s Gen 2 SoC) உடன் வருகிறது.
இந்த போனில் 200 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இந்த போனில் 5100mAh பேட்டரி 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் வருகிறது. இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ போனில் ஆர்டிக் வைட் (Arctic White), கோரல் பர்பிள் (Coral Purple) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.
ரெட்மி நோட் 13 ப்ரோ விலை (Redmi Note 13 Pro Price):
இதன் விலை பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.28,999 ஆக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இதன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.30,999 ஆகவும், இதன் ஹை-எண்டு வேரியண்ட் மாடலான 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடலின் விலை ரூ.32,999 ஆகவும் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








