Home
News

வேற எந்த போனும் வாங்காதீங்க.. நேரா Redmi Note 13 மட்டும் வாங்கும்.. பட்ஜெட் விலையில் பக்கா ஸ்மார்ட்போன்..

ரெட்மி (Redmi) நிறுவனம், அதன் புதிய ரெட்மி நோட் 13 சீரிஸ் (Redmi Note 13 Series) வரிசை ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 1 வென்னிலா மாடல் மற்றும் 2 ப்ரோ மாடல்களை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் சீரிஸ் வரிசையில் ரெட்மி நோட் 13 5ஜி (Redmi Note 13 5G), ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி (Redmi Note 13 Pro 5G), ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 13 Pro+) என்று 3 மாடல்களை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த மூன்று மாடல்களை நிறுவனம் சீனாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்தது.

வேற எந்த போனும் வாங்காதீங்க.. நேரா Redmi Note 13 மட்டும் வாங்கும்..

அங்கு அறிமுகம் செய்யப்பட்ட அதே அம்சங்களுடன் ப்ரோ மாடல் Redmi Note 13 சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுளள்ன. ஆனால், Redmi Note 13 5G சாதனத்தின் வெண்ணிலா மாடல் சிறிய மாற்றங்களுடன் இந்திய சந்தைக்குள் நுழைந்துள்ளதால், நமது கவனம் இப்போது அதன் மீது பாய்ந்திருக்கிறது. குறிப்பாக, ரெட்மி நோட் 13 வரிசையில் மிகவும் மலிவான விலை சாதனமாக இது அறிமுகமாகியுள்ளது.

ரெட்மி நோட் 13 5ஜி (Redmi Note 13 5G):

சரி, இந்த புதிய ரெட்மி நோட் 13 5ஜி (Redmi Note 13 5G) ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் என்ன? இதன் விலை என்ன? என்ற விபரங்களை இப்போது பார்க்கலாம். உண்மையை சொல்ல போனால், சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 13 மாடலை விட இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாடலில் கேமரா அம்சம் சிறப்பாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரெட்மி நோட் 13 5ஜி (Redmi Note 13 5G) ஸ்மார்ட்போன் 6.67" இன்ச் உடன் 2400 x 1080 பிக்சல்கள் (FHD+), உடைய 120Hz ரெஃப்ரஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்பிளேவை (Display) கொண்டுள்ளது. இது 240Hz டச் சாம்பிளிங் வீதத்தை வழங்குகிறது. இது 1920Hz வரை PWM டிம்மிங் தொழில்நுட்பம் மற்றும் 1000 nits பீக் பிரைட்னஸ் அம்சத்தை ஆதரிக்கிறது.

இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் உறுதியானதாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 6080 (MediaTek Dimensity 6080) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது LPDDR4x RAM மற்றும் UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3 வேரியண்ட் விருப்பத்துடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 13 (Android 13) அடிப்படையிலான MIUI 14 இல் இயங்குகிறது.

வேற எந்த போனும் வாங்காதீங்க.. நேரா Redmi Note 13 மட்டும் வாங்கும்..

இந்த ரெட்மி நோட் 13 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 108MP பிரைமரி சென்சார், 8MP அல்ட்ராவைடு யூனிட் மற்றும் 2MP மேக்ரோ ஸ்னாப்பர் ஆகியவற்றை உள்ளடக்கிய டிரிபிள் கேமரா (Triple camera) அமைப்புடன் வருகிறது. இது முன்பக்கத்தில்16MP செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது. இது 5000mAh பேட்டரியை (Battery), 33W வயர்டு சார்ஜிங்கிற்கான (Wired charging) ஆதரவுடன் கொண்டுவந்துள்ளது.

ஃபோனில் உள்ள இணைப்பு விருப்பங்களில் டூயல் சிம் (dual SIM), 5ஜி (5G), வைஃபை 6இ (WiFi 6E), புளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிஎன்எஸ்எஸ் (GNSS), என்எப்சி (NFC) மற்றும் யுஎஸ்பி டைப்-சி ஆகியவை அடங்கும். இது 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (dual stereo speaker), மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் (microSD card), ஐஆர் பிளாஸ்டர் (IR blaster) போன்ற அம்சங்களுடன் வருகிறது.

ரெட்மி நோட் 13 5ஜி விலை (Redmi Note 13 5G Price):

இதன் விலை பற்றி பேசுகையில்,
- 6GB + 128GB மாடல் ரூ. 17,999
- 8GB + 256GB மாடல் ரூ.19,999
- 12GB + 256GB மாடல் ரூ. 21,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 13 5G Vanilla Model Smartphone Price In India Check Specifications and Other Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X