சூப்பர் ஸ்டைலிஷ்ஷா Redmi Note 12T Pro அறிமுகம்! விரைவில் இந்தியாவில் ரிலீஸ்! விலை என்ன?
Redmi பிராண்டின் கீழ் Xiaomi இன்று சீனாவில் ரெட்மி நோட் 12T ப்ரோ (Redmi Note 12T Pro) என்ற ஸ்மார்ட்போனை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் இதன் விலை என்ன என்ற விபரங்களை பார்க்கலாம்.
இந்த புதிய Redmi Note 12T Pro ஸ்மார்ட் போன் 6.6' இன்ச் FHD+ LCD டிஸ்பிளேவுடன் 144Hz ரெஃப்ரஷ் ரேட் வீதம், DC டிம்மிங் மற்றும் டால்பி விஷன் போன்ற அம்சங்களுடன் வருகிறது. இது பஞ்ச் ஹோல் உடன் 16MP முன்பக்க செல்பி கேமராவைக் கொண்டுள்ளது. இது DisplayMate A+ மதிப்பீடுகளுடன் சான்றளிக்கப்பட்டது. இது VC லிக்விட் கூலிங் சிஸ்டத்துடன் வருகிறது. Dimensity 8200-Ultra சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

இது 12ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 512ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 64MP பின்புற கேமரா மற்றும் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் மற்றும் 2MP மேக்ரோ கேமராவுடன் வருகிறது. இந்த போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளது. இந்த சாதனம் 67W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,080mAh பேட்டரியை கொண்டுள்ளது.
Redmi Note 12T Pro சிறப்பம்சம் பற்றி பேசுகையில், இந்த சாதனம் 6.6″ FHD+ உடன் கூடிய 2460 x 1080 பிக்சல்கள் உடன் LCD டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 30 / 48 / 50 / 60 / 90 / 120 / 144 ரெஃப்ரஷ் ரேட் வீதத்துடன் வருகிறது. DC டிம்மிங், 10-பிட் கலர் பீப் டெப்த், Dolby Vision, HDR010, 2047 பிரகாசம் சரிசெய்தல் நிலைகள் Mali-G610 MC6 GPU உடன் 3.1GHz ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8200-அல்ட்ரா 4nm சிப்செட் உடன் வருகிறது.
இது 8GB LPDDR5 ரேம் உடன் 128GB / 256GB, 12GB LPDDR5 RAM உடன் 256GB / 512GB UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது MIUI 14 உடன் Android 13 இயங்குதளத்துடன் வருகிறது. இது டூயல் சிம் கார்டுடன் வருகிறது. 64MP ஆம்னிவிஷன் OV64B 1/2″ சென்சார், 119° FOV உடன் 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ், 2MP மேக்ரோ கேமராவுடன் வருகிறது. இது 4K வீடியோ ரெக்கார்டிங் உடன் வருகிறது.

OmniVision OV16A1 சென்சார் கொண்ட 16MP முன்பக்க கேமராவுடன் வருகிறது. இது 1080p வீடியோ ரெக்கார்டிங் உடன் வருகிறது. இது 3.5மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், ஐஆர் சென்சார், எக்ஸ்-அச்சு நேரியல் மோட்டார்கள் ஸ்பிளாஸ் எதிர்ப்பு (IP53), 5G SA/NSA, Wi-Fi 6 (2.4 + 5GHz), 2×2 MIMO, புளூடூத் 5.3, Beidou | GPS (L1+L5) |GLONASS | QZSS (L1+L5), NFC போன்ற அம்சங்களுடன் வருகிறது.
இந்த Redmi Note 12T Pro ஸ்மார்ட்போன் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5080mAh பேட்டரியை பேக் செய்கிறது. Redmi Note 12T Pro ஆனது ஐஸ் ஃபாக் ஒயிட், கார்பன் பிளாக் மற்றும் ஹருமி ப்ளூ நிறங்களில் வருகிறது. இதன் 8ஜிபி + 128ஜிபி மாடல் இந்திய மதிப்பில் ரூ.19,830 விலையில் வரும். 8 ஜிபி + 256 ஜிபி, 12 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ.20,995 விலையில் வருகிறது.
இதன் டாப் எண்ட் 12 ஜிபி + 512 ஜிபி மாடலின் விலை ரூ. 23,300 இல் வருகிறது. இது இப்போது சீனாவில் ஆர்டர் செய்யக் கிடைக்கிறது .மே 31 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும். இது இந்தியாவில் Redmi K60i என அறிமுகப்படுத்தப்படலாம்.


Click it and Unblock the Notifications








