Home
News

108MP கேமராவுடன் Redmi-ல் இப்படி ஒரு புது பட்ஜெட் Mobile-ஆ! ஆத்தி.! அம்சங்களாம் அள்ளுதே!

Mobile பிரியர்களே.! உங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக் கூடிய புது ஸ்மார்ட்போன் சாதனத்தை ரெட்மி (Redmi) நிறுவனம் விரைவில் வெளியிடவுள்ளது. இந்த சாதனம் Redmi Note 12S என அழைக்கப்படும். இது ஏன் வொர்த்தான போனா? இல்லையா? இதற்காக காத்திருக்கலாமா?

ரெட்மி நிறுவனம் சமீப காலமாக, குறைந்த விலையில் நிறைய அற்புதமான சாதனங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அதன் வியாபாரம் இந்தியாவில் கல்லா கட்ட துவங்கியுள்ளது. ரெட்மி நிறுவனம், மீண்டும் அதன் வியாபாரத்தைப் பெருகும் நோக்கத்தில், அடுத்து ஒரு புதிய சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இது Redmi Note 12S என்ற பெயரில் அறிமுகமாகவுள்ளது.

108MP கேமராவுடன் Redmi-ல் இப்படி ஒரு புது பட்ஜெட் Mobile-ஆ! ஆத்தி.!

Redmi நிறுவனம் அதன் போர்ட்ஃபோலியோவில் இருக்கும் Redmi Note 12 சீரிஸ் கீழ் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதற்கான வேலைகளில் மும்முரமாக களமிறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மிக நீண்ட காலத்திற்கு முன்பு, Redmi Note 12S என்ற சாதனம் FCC சான்றிதழ் அதிகாரத்தின் இணையதளத்தில் காணப்பட்டது. இப்போது, ​​ஒரு புதிய லீக் தகவலின் படி, இந்த சாதனத்தின் உற்பத்தி பல ஐரோப்பிய மற்றும் யூரேசிய பிராந்தியங்களில் தொடங்கியுள்ளது என்று கூறப்படுகிறது.

வரவிருக்கும் புதிய Redmi Note 12S சாதனத்தைப் பற்றிப் பேசுகையில், இந்த சாதனம் எல்லா சாத்தியக்கூறுகளிலும், 4G சாதனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் அடுத்த இரண்டு மாதங்களில் இது உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிப்ஸ்டர் முகுல் ஷர்மா (@stufflistings) படி , வரவிருக்கும் Redmi Note 12S இன் தயாரிப்பு தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த Redmi Note 12S சாதனத்தின் வெளியீடு அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நடைபெறும் என்று டிப்ஸ்டர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த சாதனம் சமீபத்தில் FCC சான்றிதழ் இணையதளத்திலும் தோன்றியது. இது அதன் வடிவமைப்பு மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருப்பதை உறுதிப்படுத்தியது. Redmi Note 11S உடன் ஒப்பிடும்போது சாதனம் வடிவமைப்பு சில ஒற்றுமைகளைக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

108MP கேமராவுடன் Redmi-ல் இப்படி ஒரு புது பட்ஜெட் Mobile-ஆ! ஆத்தி.!

Redmi Note 12S சிறப்பம்சம்
Redmi Note 12S சாதனம் ஆனது 90Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்துடன் இயங்கும் 6.43' இன்ச் AMOLED டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த Redmi Note 12S சாதனம் MediaTek Helio H96 சிப்செட் மூலம் இயங்கும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த டிவைஸ் 8GB வரை LPDDR4x ரேம் மற்றும் 128GB வரை கொண்ட ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேமராக்களைப் பொறுத்தவரை, Redmi Note 12S ஸ்மார்ட்போன் ஆனது 108MP + 8MP + 2MP கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும், முன்பக்கத்தில், இந்த சாதனம் 16MP செல்பி கேமராவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த சாதனத்தின் பேட்டரியைப் பொறுத்தவரை, Redmi Note 12S ஆனது USB Type-C சார்ஜிங் போர்ட்டில் 67W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்யும்.

இறுதியாக இந்த Redmi Note 12S சாதனம் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI 14 ஸ்கின் உடன் வரக்கூடும் என்று கூறப்படுகிறது. இதன் விலை பற்றி பேசுகையில், இது இந்திய மதிப்பில் ரூ.15,00 முதல் ரூ. 17,999 விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. 108MP கேமராவுடன் பட்ஜெட் விலையில் ஒரு பெஸ்ட் போனை வாங்க 2 மாதங்கள் காத்திருப்பதில் தவறில்லையே. இது பற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதை கீழே கமெண்டில் பதிவிடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 12S Might Launch In The Next Couple Of Months With a 108MP Camera Under Budget Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X