Home
News

உலகில் எந்த போனிலும் இல்லாத சிப்செட்! ரெட்மியின் மலிவு விலை போனில்! என்ன காரணம்?

எந்தவொரு ஸ்மார்ட்போன் நிறுவனமும் மலிவு விலை போன்களில் கொடுக்காவே யோசிக்கும், ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட்டை ரெட்மி (Redmi) நிறுவனம், ரெட்மி நோட் 12ஆர் (Redmi Note 12R) போனில் கொடுக்க உள்ளது. இந்த போனின் விலை, அம்சங்கள் குறித்து இங்கு காண்போம்.

இப்போது வரும் போன்களில் கேமரா, பேட்டரிக்கு அடுத்தப்படியாக மிகவும் முக்கியமாக பார்க்கப்படுவது, சிப்செட் (Chipset) மட்டுமே. ஏனென்றால், கேமிங் முதல் இன்டர்நெட் வேகம் வரையில், சிப்செட் சிறப்பாக இருந்தால் மட்டுமே போனில் நன்றாக இருக்கும். ஆனால், சிறப்பான சிப்செட்டை மலிவு விலை போன்களில் பார்க்க முடியாது.

எந்த போனிலும் இல்லாத சிப்செட்! ரெட்மியின் மலிவு விலை போனில்!

இருப்பினும், ரெட்மி நிறுவனம் மிகப்பெரும் சம்பவத்தை செய்ய இருக்கிறது. மிட்-ரேன்ஞ் விலையை கூட இல்லாமல், மலிவு விலையில், ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் கொண்ட ரெட்மி நோட் 12ஆர் போனை களமிறக்க உள்ளது. இந்த போனின் அம்சங்கள், விலை மற்றும் வெளியீட்டு தேதி குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

ரெட்மி நோட் 12 ஆர் அம்சங்கள் (Redmi Note 12R Specification): இந்த ரெட்மி போன் 6.79 இன்ச் (2460*1080 பிக்சல்ஸ்) ஃபுல்எச்டி பிளஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. இந்த போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Octa Core Snapdragon 4 Gen 2) சிப்செட் வருகிறது.

இந்த சிப்செட் வெளியாகும் முதல் போன் ரெட்மி நோட் 12 ஆர் என்று கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) வருகிறது. 4 ஜிபி, 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டும் வருகிறது.

டூயல் சிம் கார்ட் வசதி இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் வருகிறது. 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது. சைடு மவுண்டென்ட் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) வருகிறது.

3.5மிமீ ஆடியோ ஜேக் வருகிறது. 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த போனின் வடிவமைப்பு 168.6×76.28×8.17மிமீ அளவில் உள்ளது. மொத்தமாக 199 கிராம் எடை கொண்டுள்ளது. மிட்நைட் பிளாக் (Midnight Black), டைம் ப்ளூ (Time Blue) மற்றும் ஸ்கை பேண்டஸி (Sky Fantasy) ஆகிய 3 கலர்களில் வெளியாக உள்ளது.

சீனாவில், இந்த போன் ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது. அடுத்த சில வாரங்களில், இந்தியாவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதுவொரு பட்ஜெட் விலை போனாகும். சொல்லப்போனால், மலிவான விலையில், ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட்டுன் வெளியாகும் முதல் போன், ரெட்மி நோட் 12 ஆர் என்பது ஸ்மார்ட்போன் பிரியர்களை வியக்க வைத்திருக்கிறது.

இந்த போனின் விலையை பொறுத்தவரையில், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட் ரூ.12,530 க்கும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட் ரூ.13,670 க்கும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட் ரூ.18,240 க்கும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி வேரியண்ட் ரூ.20,520 க்கும் விற்பனையாக வாய்ப்புள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Redmi Note 12R Price, Specifications Leaked With Snapdragon 4 Gen 2, 5000mAh, Here Full Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X