ஜென் 2 தெரியுமா? ரெட்மி போனுக்கு கிடைக்கப்போகும் மகுடம்! ரூ.12,530 போதும்!
ரெட்மி நிறுவனத்தின் மலிவு விலை போனில், இதுவரையில் வெளியான எந்த போன்களிலும் இல்லாத குவால்கம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் வருகிறது. இந்த சிப்செட் கேமரா, பேட்டரி, டிஸ்பிளே என்று அனைத்தையும் ஒட்டுமொத்தாக மாற்றப்போகிறது. இதன் முழு விவரம் இதோ.
ரெட்மி நோட் 12 ஆர் போன் சிப்செட் (Redmi Note 12R Chipset): இந்த ரெட்மி போனில் குவால்கம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Qualcomm Snapdragon 4 Gen 2 ) சிப்செட் வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த குவால்கம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட், இதுவரையில் வெளியான எந்த போன்களிலும் கொடுக்கப்படவில்லை.

இதுவே முதல் முறையாகும். இந்த சிப்செட் கொண்டிருக்கும் போனின் சிபியுவில் (CPU) 2.2GHz பீக் ஸ்பீடு பர்ஃபாமென்ஸ் கிடைக்கும். இது மற்ற போன்களை விட 10 சதவீதம் அதிகமாகும். இந்த சிப்செட்டில் குவால்கம் குயிக் சார்ஜ் 4.0 (Qualcomm Quick Charge 4.0) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், ஃபாஸ்ட் சார்ஜிர் வசதி கொடுக்கப்படாமலேயே 15 நிமிடங்களில், 50 சதவீதம் சார்ஜ் செய்துகொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.
அதேபோல, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட போனின் டிஸ்பிளே திறனை, இந்த சிப்செட் சாதாரணமாக வழங்குமாம். இந்த குவால்கம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் கேமராவுக்கு, மல்டி கேமரா டெம்ப்ரோரல் பில்டரிங் (Multi Camera Temporal Filtering) தொழில்நுட்பத்தை வழங்குகிறது. இதன் மூலம், குவாலிட்டியான போட்டோ, வீடியோ கிடைக்கும்.
அதேபோல ப்ளூடூத், வைபை, நெட்வொர்க் உள்ளிட்ட கனெக்டிவிட்டியில் அதிவேகமாக செயல்பாட்டை வழங்கும். இப்படி பல்வேறு அம்சங்களுக்கு குவால்கம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் மிகப்பெரிய முன்னேற்றமாக இருக்கப்போகிறது. இந்த போனில் மற்ற அம்சங்களை பொறுத்தவரையில், 6.79 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே கொண்டிருக்கிறது.
இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 வருகிறது. 4 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ், 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் என்று 4 வேரியண்ட்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போன் 50 எம்பி மெயின் + 2 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் 5 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது.
22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரி வருகிறது. டைம் ப்ளூ (Time Blue), மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் ஸ்கை பேண்டஸி (Sky Fantasy) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வரும். இந்த போன் ஜூலையில் வெளியாக உள்ளது. இவ்வளவு அம்சங்களை கொண்டிருந்தாலும், மலிவு விலையில் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், ரூ.12,530 விலையில், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட், ரூ.13,670 விலையில், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட், ரூ.18,240 விலையில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட், ரூ.20,520 விலையில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி வேரியண்ட் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications