ஆண்ட்ராய்டு 12 ஆதரவு உறுதி: பெரிய டிஸ்ப்ளே, பேட்டரி உடன் அறிமுகமாகும் ரெட்மி நோட் 12- அமோக வரவேற்பு இருக்கும்!

|

சியோமி சமீபத்தில் ரெட்மி நோட் 11 தொடர் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய நிலையில் நிறுவனம் சீனாவில் ரெட்மி நோட் 12 தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக தகவல்கல் வெளியாகி இருக்கிறது. ரெட்மி நோட் 12 தொடரில் இரண்டு ஸ்மார்ட்போன்கள் தற்போது சீன ஒழுங்குமுறை தளமான டீனா தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ரெட்மி நோட் 12 தொடர் ஸ்மார்ட்போன்

ரெட்மி நோட் 12 தொடர் ஸ்மார்ட்போன்

டீனா தளத்தின் பட்டியல் படி, ரெட்மி நோட் 12 தொடர் ஸ்மார்ட்போன்களின் இரண்டு வகைகளும் முழு எச்டி ப்ளஸ் தெளிவுத்திறன் உடன் வருகிறது. இந்த ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 12 சாதனமானது ரெட்மி நோட் 11 ப்ரோ ப்ளஸ் 5ஜி போன்றே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

குவால்காம் அல்லது மீடியாடெக் செயலி

குவால்காம் அல்லது மீடியாடெக் செயலி

ரெட்மி நோட் 12 சாதனத்தின் இரண்டு வகைகளும் 5ஜி ஆதரவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது இரட்டை சிம் கார்ட் ஸ்லாட்கள் உடன் வரும் என பட்டியல் தெரிவிக்கிறது. இந்த ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போன்களானது குவால்காம் அல்லது மீடியாடெக் செயலியை அடிப்படையாகக் கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் முழுமையாக வெளியிடப்படவில்லை. இந்த ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போனில் குறைந்தது இரண்டு வேரியண்ட்களில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போனின் உயர் மாறுபாடு 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் இருக்கும் எனவும் இதன் சிறிய மாறுபாடு 4300 எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. சிறிய பேட்டரி உடன் வரும் ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போன் மெலிதான வடிவமைப்புடன் இலகுரக வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆஃப் தி பாக்ஸ் உடன் வரும் என்ற குறிப்பிடத்தக்க அம்சத்தோடு இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான எம்ஐயூஐ 13 உடன் வரும் என கூறப்படுகிறது. பல ரெட்மி மற்றும் எம்ஐ சாதனங்கள் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஆதரவோடு வந்தாலும் குறிப்பிட்ட சாதனங்களான ரெட்மி நோட் 11 ப்ரோ ப்ளஸ் 5ஜி போன்ற சாதனங்கள் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் ஆதரவோடு வருகிறது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு

வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு

ரெட்மி நோட் 12 வெளியீட்டு விவரங்கள் தற்போது டீனா தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதால் ரெட்மி நோட் 12 தொடர் ஸ்மார்ட்போன்கள் விரைவில் சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்த சாதனம் இந்தியா மற்றும் பிற சர்வதேச சந்தைகளுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் பெரிய அளவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என தகவல்கள் கூறுகிறது.

சமீபத்தில் வெளியான ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போன்

சமீபத்தில் வெளியான ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போன்

அதேபோல் ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனின் இந்திய விலை குறித்த விவரங்களை பார்க்கையில். ரெட்மி 10 ஏ ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.8,499 என அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.9499 என கிடைக்கிறது. ஏப்ரல் 26 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனானது சியோமி இணையதளம் மற்றும் அதிகாரிப்பூர்வ கடைகளில் வாங்குவதற்கு கிடைக்கும். இந்த ரெட்மி 10 ஏ ஸ்மார்ட்போனானது சார்கோல் பிளாக், சீ ப்ளூ மற்றும் ஸ்லேட் க்ரே என்ற வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த சாதனத்தின் பின்புற பேனல் கடினமானதாக இருக்கும் என சியோமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Redmi Note 12 Smartphone Battery, Display Leaked Via Online: Android 12 Os Confirms., Specs Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X