உலகத்தில "இந்த" அம்சம் 2 போன்ல மட்டுமே இருக்கு.! Redmi Note 12 Pro+ இந்தியா வருகிறதா?

|

Xiaomi நிறுவனம் சீன சந்தையில் Redmi Note 12 தொடரை அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ரெட்மி நோட் 12 தொடர் அக்டோபர் 27 அன்று சீனாவில் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு புறம், இதே நேரத்தில், இந்தியாவின் BIS வலைத்தளத்திலும் இந்த Redmi Note 12 தொடரானது காணப்பட்டுள்ளது. குறிப்பாக, Redmi Note 12 , Redmi Note 12 Pro மற்றும் Redmi Note 12 Pro+ ஆகிய மூன்று சாதனங்களை இந்த சீரிஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி நோட் 12 ப்ரோ+ இப்படி ஒரு அம்சத்துடன் அறிமுகமா?

ரெட்மி நோட் 12 ப்ரோ+ இப்படி ஒரு அம்சத்துடன் அறிமுகமா?

இந்த புதிய ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்னதாக, ரெட்மி நோட் 12 ப்ரோ+ (Redmi Note 12 Pro+) ஆனது 200MP சாம்சங் ISOCELL HPX சென்சார் கொண்டதாக வரும் என்பதை பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது.

நாம் முன்பே சொன்னது பூலை, மற்றொரு வளர்ச்சியில், Redmi Note 12 ஸ்மார்ட்போனின் இந்திய வேரியண்ட் மாடல் Bureau of Indian Standards தரவுத்தளத்தில் தோன்றியுள்ளது.

ரெட்மி நோட் 12 ப்ரோ+ கேமரா விவரங்கள் மற்றும் நோட் 12 சீரிஸ் பற்றி நமக்குத் தெரிந்தவற்றைக் கூர்ந்து கவனிப்போம்.

200MP சாம்சங் ISOCELL HPX உடன் வரும் முதல் போனா இது?

200MP சாம்சங் ISOCELL HPX உடன் வரும் முதல் போனா இது?

Redmi Note 12 Pro+ ஆனது 1/1.4 இன்ச் சென்சார் அளவு மற்றும் 2.24μm உடன் கூடிய 200MP Samsung ISOCELL HPX சென்சார் கொண்டிருக்கும் என்பதை Xiaomi இப்போது உறுதிப்படுத்தியுள்ளது.

சாம்சங் ஹெச்பிஎக்ஸ் சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Samsung ISOCELL HPX ஆனது Sony IMX766 ஐ விட 24% பெரியது என்று பிராண்ட் கூறுகிறது.

இது தவிர, பிராண்ட் இந்த புதிய சாதனம் பற்றி எதையும் வெளியிடவில்லை.

இப்படி செஞ்சா ரூ.8000 விலையில் 32இப்படி செஞ்சா ரூ.8000 விலையில் 32" இன்ச் Smart TV வாங்கலாம்.! இது தான் லாஸ்ட் சான்ஸ்.!

Redmi K50i உங்களுக்கு நினைவிருக்கிறதா?

Redmi K50i உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இருப்பினும், Redmi Note 12 Pro+ வடிவமைப்பு அடிப்படையில் Note 12 Pro ஐ ஒத்திருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

மறுபுறம், இது மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்பதை டீஸர் உறுதிப்படுத்துகிறது. வடிவமைப்பைப் பற்றி பேசுகையில், Redmi Note 12 சீரிஸ் கேமரா தொகுதி வடிவமைப்பு சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi Note 11T மாடலை போலவே காட்சியளிக்கிறது.

தெரியாதவர்களுக்கு, Redmi Note 11T Pro ஆனது இந்தியச் சந்தையில் Redmi K50i ஆக அறிமுகமானது.

210W பாஸ்ட் சார்ஜிங் உடன் வெளிவருமா?

210W பாஸ்ட் சார்ஜிங் உடன் வெளிவருமா?

Redmi Note 12 Pro இல் Sony IMX766 சென்சார் பயன்படுத்தப்படும் என்பதை Xiaomi உறுதிப்படுத்தியுள்ளது.

Redmi Note 12 Pro ஆனது MediaTek Dimensity 1080 சிப்செட்டை கொண்டிருக்கும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். Redmi Note 12 Pro ஆனது 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும்.

அதேசமயம், Redmi Note 12 Pro+ ஆனது 3C சான்றிதழ் தரவுத்தள பட்டியலின்படி 210W சார்ஜிங்கை வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

BSNL 4G மற்றும் 5G அறிமுக தேதி உறுதியானது.! சூப்பர் பாஸ்ட் வேகத்திற்கு நீங்க ரெடியா.!BSNL 4G மற்றும் 5G அறிமுக தேதி உறுதியானது.! சூப்பர் பாஸ்ட் வேகத்திற்கு நீங்க ரெடியா.!

இந்தியாவிற்குள் இந்த ஸ்மார்ட்போன் வருகிறதா?

இந்தியாவிற்குள் இந்த ஸ்மார்ட்போன் வருகிறதா?

Redmi Note 12 ஸ்மார்ட்போன் IMEI தரவுத்தளத்திலும் BIS சான்றிதழிலும் காணப்பட்டது என்று டிப்ஸ்டர் தகவல் குறிப்பிடுகிறது. சீனாவில் Redmi Note 12 தொடர் அறிமுகத்திற்கு முன்னதாக, Redmi Note 12 ஆனது IMEI தரவுத்தளம் மற்றும் BIS சான்றிதழ் வலைத்தளங்களில் தோன்றியுள்ளது. சாதனம் IMEI தரவுத்தளத்தில் மாதிரி எண் 22101316G உடன் காணப்பட்டது (G என்பது உலகளாவிய மாறுபாட்டைக் குறிக்கிறது).

இந்தியாவில் காணப்பட்ட மாடல் விபரம்.!

இந்தியாவில் காணப்பட்ட மாடல் விபரம்.!

இதனுடன், ரெட்மி நோட் 12 இந்திய மாறுபாடும் BIS சான்றிதழில் காணப்பட்டது. பிரபல டிப்ஸ்டர் முகுல் ஷர்மா, Bureau of Indian Standards தரவுத்தளத்தில் 22101316I என்ற மாதிரி எண் கொண்ட Redmi Note 12 ஸ்மார்ட்போன் மாடலை கண்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

இருப்பினும், IMEI டேட்டாபேஸ் மற்றும் BIS சான்றளிப்பு இணையதளத்தில் காணப்பட்ட நோட் 12, நோட் 12 சீன மாறுபாடு போன்றதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால், இந்தியாவில் இந்த சீரிஸ் அறிமுகமாவது உறுதியாகியுள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi Note 12 Pro+ 5G Flagship Smartphone Confirmed to Launch With 200MP Camera Soon

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X