சீனால தான் இதன் பெயர் Redmi Note 12 5G.! இந்தியால இதன் பெயரே வேற.! முழுசா மாத்திட்டாங்க.!

|

Xiaomi சமீபத்தில் சீனாவில் Redmi Note 12 சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. சியோமியின் சொந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி நோட் 12 சீரிஸ் இன் கீழ் நான்கு சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரெட்மி நோட் 12 5ஜி (Redmi Note 12 5G), ரெட்மி நோட் 12 ப்ரோ (Redmi Note 12 Pro), ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் (Redmi Note 12 Pro+) மற்றும் ரெட்மி நோட் 12 எக்ஸ்ப்ளோரர் எடிஷன் (Redmi Note 12 Explorer Edition) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Redmi Note 12 Pro+ 5G இந்தியாவில் Xiaomi 12i ஹைப்பர்சார்ஜ் ஆக அறிமுகமா?

Redmi Note 12 Pro+ 5G இந்தியாவில் Xiaomi 12i ஹைப்பர்சார்ஜ் ஆக அறிமுகமா?

Redmi Note 12 Pro+ 5G ஆனது இந்தியாவில் Xiaomi 12i ஹைப்பர்சார்ஜ் (Xiaomi 12i hypercharge) ஆக அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை எழுதும் போது Xiaomi எந்த விவரங்களையும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், இந்த ஸ்மார்ட்போனின் இந்திய மாறுபாடு Bureau of Indian Standards (BIS) இணையதளத்தில் மாடல் எண் 22101316UP உடன் காணப்பட்டது.

Redmi Note 12 5G இந்தியாவில் வேறு பெயருடன் வருகிறதா?

Redmi Note 12 5G இந்தியாவில் வேறு பெயருடன் வருகிறதா?

இத்துடன், மற்றொரு ரெட்மி நோட் 12 சீரிஸ் போன் இந்தியாவில் மறுபெயரிடப்பட்ட சாதனமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

ரெட்மி நோட் 12 வரிசையில் இருக்கும் Redmi Note 12 5G ஸ்மார்ட்போன் மாடல் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் POCO போனாக அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Xiaomi இந்த மாத இறுதியில் வெண்ணிலா ரெட்மி நோட் 12 5G ஐ POCO போனாக அறிமுகப்படுத்தலாம்.

BSNL ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பயனர்களுக்கு BSNL ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பயனர்களுக்கு "பெரிய" டிவிஸ்ட்.! இந்த மேட்டரை உடனே தெரிஞ்சுக்கோங்க.!

இந்தியாவில் பெயர் மாறும் சீன ஸ்மார்ட்போன்.!

இந்தியாவில் பெயர் மாறும் சீன ஸ்மார்ட்போன்.!

சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சாதனம் 22101317C என்ற மாடல் எண்ணைக் கொண்டுள்ளது. அதன் ஷார்ட் மாடல் எண் M17 ஆகும்.

இந்தியாவில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட Redmi Note 12 5G ஆக வெளியிடக்கூடிய POCO ஃபோன், BIS தரவுத்தளத்தில் காணப்பட்டது.

இந்த POCO ஃபோனில் 22111317PI என்ற மாடல் எண் உள்ளது. முழு மாடல் எண் சற்று வித்தியாசமாக இருந்தாலும், சுருக்கப்பட்ட மாடல் எண், சீன ரெட்மி நோட் 12 5G போலவே இருக்கிறது.

POCO சாதனமாக அறிமுகமாகிறது Redmi Note 12 5G ஸ்மார்ட்போன்.!

POCO சாதனமாக அறிமுகமாகிறது Redmi Note 12 5G ஸ்மார்ட்போன்.!

இந்த போன் இந்தியாவில் POCO சாதனமாக அறிமுகப்படுத்தப்படலாம் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. இந்த போன் இந்தியாவில் நவம்பரில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் மாடல் எண் தெரிவிக்கிறது.

இந்தியாவில் இந்த போன் அறிமுகப்படுத்தப்படும் போது என்ன மானிகர் இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், POCO M5 ஏற்கனவே இந்தியாவில் கிடைப்பதைக் கருத்தில் கொண்டு, அதன் 5ஜி மாறுபாடு (5G variant) விரைவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!

Redmi Note 12 5G போனும் வரவிருக்கும் Poco போனும் ஒரே அம்சத்துடன் வருமா?

Redmi Note 12 5G போனும் வரவிருக்கும் Poco போனும் ஒரே அம்சத்துடன் வருமா?

POCO தற்போது இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் பற்றிய எந்த விவரங்களையும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. அறிவிப்பு வெளியானதும் மேலும் கூடுதல் விவரங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

இதற்கிடையில், Redmi Note 12 5G இன் சிறப்பம்ச விபரங்கள் மற்றும் அம்சங்களைப் பற்றி இப்போது விரிவாகப் பார்க்கலாம். வரவிருக்கும் ஸ்மார்ட்போனில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்பது இங்கே.

Redmi Note 12 5G சிறப்பம்சம்

Redmi Note 12 5G சிறப்பம்சம்

ரெட்மி Note 12 5G ஸ்மார்ட்போன் ஆனது 6.67' இன்ச் முழு HD+ OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120Hz ரெப்ரெஷ் ரேட் வீதத்தை ஆதரிக்கிறது. இது 1200 nits இன் பீக் பிரைட்னெஸ் உடன் வருகிறது.

டிஸ்பிளேவின் மேல் மையத்தில் பஞ்ச் ஹோல் நாட்ச் கட்அவுட் உள்ளது. ஹூட்டின் கீழ் இது Snapdragon 4 Gen 1 SoC உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000mah பேட்டரியை 33W பாஸ்ட் சார்ஜிங் அவுட் ஆஃப் பாக்ஸுடன் கொண்டுள்ளது.

iPhone இல் 5G யூஸ் செய்ய ரெடியா? இப்படி செஞ்சா உடனே அப்டேட் கிடைக்கும்.! ஆனா?iPhone இல் 5G யூஸ் செய்ய ரெடியா? இப்படி செஞ்சா உடனே அப்டேட் கிடைக்கும்.! ஆனா?

டூயல் கேமராவுடன் பெஸ்டான பட்ஜெட் 5ஜி போனா இந்த ரெட்மி நோட் 12 5ஜி?

டூயல் கேமராவுடன் பெஸ்டான பட்ஜெட் 5ஜி போனா இந்த ரெட்மி நோட் 12 5ஜி?

பின்புறத்தில், இது டூயல் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 48MP பிரைமரி கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் கொண்டுள்ளது.ரெட்மி நோட் 12 5ஜி பஞ்ச் ஹோல் கட்அவுட்டின் உள்ளே 8MP முன்பக்கக் கேமராவைக் கொண்டுள்ளது.

இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI 13 இல் இயங்குகிறது. இந்த சாதனம் சீனாவில் என்ன விலையில் வருகிறது என்று பார்க்கலாம்.

ரெட்மி நோட் 12 5G போன் விலை என்ன?

ரெட்மி நோட் 12 5G போன் விலை என்ன?

Xiaomi நிறுவனம் ரெட்மி நோட் 12 5G போன் சீனாவில் CNY 1199 விலைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்திய மதிப்பில் இது தோராயமாக ரூ. 13,600 ஆகும். ரெட்மி நோட் 12 5ஜி போனின் அடிப்படை மாடல் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த சாதனம் 6GB + 128GB, 8GB+ 128GB மற்றும் 8GB + 256GB ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் வருகிறது.

சிலருக்கு மட்டும் ரூ.4949 விலையில் Samsung Galaxy M33 5G வாங்க வாய்ப்பு.! அந்த ஒரு சிலர் நீங்களா?சிலருக்கு மட்டும் ரூ.4949 விலையில் Samsung Galaxy M33 5G வாங்க வாய்ப்பு.! அந்த ஒரு சிலர் நீங்களா?

ரெட்மி நோட் 12 5ஜி சிறந்த பட்ஜெட் 5ஜி போனா?

ரெட்மி நோட் 12 5ஜி சிறந்த பட்ஜெட் 5ஜி போனா?

இந்தியாவில் 8 ஜிபி ரேம் விருப்பங்களைப் பார்க்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. Redmi Note 12 5G வெள்ளைவைட், ப்ளூ, மற்றும் பிளாக் வண்ணங்களில் வருகிறது.

இதன் எடை 188 கிராம் மற்றும் 7.98 மிமீ தடிமன் கொண்டது. இந்தியாவில் POCO போனாக மறுபதிப்பு செய்யப்படவுள்ள Redmi Note 12 5G போனை வாங்க நீங்கள் விரும்புவீர்களா இல்லையா என்பதைத் தெரியப்படுத்துங்கள்.

இது சிறந்த பட்ஜெட் 5ஜி போனாக (Budget 5G phone) இந்தியாவில் வெளிவர வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi Note 12 5G Phone Could Launch As a Budget POCO Device In India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X