தக் லைஃப் செய்யும் Xiaomi.. இரண்டு Redmi 4G போன்கள் மீது பிரைஸ் கட்.. முன்பைவிட குறைந்த விலையில்.. எந்த மாடல்?
சியோமி (Xiaomi) நிறுவனத்திற்கு சொந்தமான ரெட்மி (Redmi) பிராண்ட் ஸ்மார்ட்போன்கள் மீது அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பிரைஸ் கட் (Price cut) இப்போது ரெட்மியின் 2 புதிய 4ஜி (4G) சாதனங்கள் மீது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Redmi: பிராண்ட் இப்போது அதன் பட்ஜெட் பிரைஸ் ஸ்மார்ட்போன் மாடல்களான ரெட்மி நோட் 12 4ஜி (Redmi Note 12 4G) மற்றும் ரெட்மி 12 4ஜி (Redmi 12 4G) ஆகிய மாடலைகளின் மீது பிரைஸ் கட்டை அறிவித்துள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன் சாதனங்களும் ஏற்கனவே மிகவும் குறைந்த விலையில் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்போது இன்னும் குறைந்த விலையில் கிடைக்கிறது என்று நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது.

ரெட்மி 4G மொபைல்: ஆம், முன்பை விட மிகவும் குறைந்த விலையில் இந்த ரெட்மி நோட் 12 4ஜி (Redmi Note 12 4G) மற்றும் ரெட்மி 12 4ஜி (Redmi 12 4G) ஸ்மார்ட்போன் சாதனங்கள் விற்பனை செய்யப்படுகிறது என்று ரெட்மி அறிவித்துள்ளது. இந்த அதிரடி பிரைஸ் கட் பற்றிய விபரங்களை பார்க்கையில், இரண்டு சாதனங்களும் வெவ்வேறு மதிப்பிலான விலை குறைப்பை பெற்றுள்ளன.
ரெட்மி நோட் 12 4ஜி (Redmi Note 12 4G): ஸ்மார்ட்போனின் 6GB ரேம் + 128GB வேரியண்ட் மாடல்களுக்கான விலைகளை மார்ச் 1 முதல் குறைத்துள்ளது.தற்போதைய பிரைஸ் கட் சலுகைக்கு பிறகு, புதிய ரெட்மின் நோட் 12 4ஜி (Redmi Note 12 4G) ஸ்மார்ட்போனின் விலை ரூ. 13,999 இல் இருந்து ரூ. 12,999 ஆக குறைந்துள்ளது.
பிரைஸ் கட்: இந்த 4ஜி ஸ்மார்ட்போன் சாதனத்தின் மீது நிறுவனம் இப்போது நிரந்தரமாக ரூ.1000 விலை குறைத்துள்ளது. இந்த புதிய பிரைஸ் கட் விலை ஸ்மார்ட்போன் வாங்கும் எல்லா ஆன்லைன் தளம் மற்றும் ஆப்லைன் தலங்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், ரெட்மி 12 4ஜி சாதனத்தின் விலையையும் நிறுவனம் இப்போது குறைத்துள்ளது. இதன் புதிய விலை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

ரெட்மி 12 4ஜி (Redmi 12 4G): ஸ்மார்ட்போன் சாதனம் இப்போது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ. 10,999 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது, ரெட்மி நிறுவனம் அறிவித்துள்ள புதிய பிரைஸ் கட் படி, ரெட்மி 12 4ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 10,499 ஆக குறைந்துள்ளது. ஆம், இந்த ஸ்மார்ட்போன் மீது நிறுவனம் இப்போது ரூ. 500 விலை குறைப்பை அறிவித்துள்ளது.
தக் லைஃப்: ரெட்மி நிறுவனம் அதன் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் இதுவொரு பெரிய பிரைஸ் கட் என்றும், முன்பை விட ரெட்மி நோட் 12 4ஜி (Redmi Note 12 4G) மற்றும் ரெட்மி 12 4ஜி (Redmi 12 4G) ஆகிய ஸ்மார்ட்போன்களின் விலை குறைந்துள்ளது என்றும் விளம்பரம் செய்துள்ளது. ரூ.1000 மற்றும் ரூ.500 பெரியளவு விலை குறைப்பாக சிலருக்கு தெரியாத போதிலும், நிறுவனம் தனது தக் லைஃப் பணியில் கெத்தாக விளம்பரம் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








