வெறும் 1 மணி நேரத்தில் 270,000 யூனிட் விற்பனை.. Redmi Note 11T Proவில் அப்படி என்ன இருக்கிறது?

|

ரெட்மி நோட் 11டி ப்ரோ மே 24 அன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ரெட்மி நோட் 11டி ப்ரோ ஸ்மார்ட்போன் இப்போது, ​​விற்பனைக்கு வந்த ஒரு மணி நேரத்தில் 270,000 யூனிட்களுக்கு மேல் விற்கப்பட்டதாகக் கூறி ஒரு ரெட்மி நிர்வாகி ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த புதிய அறிமுகம் ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கிய வெறும் ஒரு மணி நேரத்தில் இத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அப்படி, சியோமியின் இந்த புதிய சாதனத்தில் என்ன சிறப்பு இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்.

ரெட்மி நோட் 11டி ப்ரோ ஸ்மார்ட்போன்

ரெட்மி நோட் 11டி ப்ரோ ஸ்மார்ட்போன்

ரெட்மி நோட் 11டி ப்ரோ ஸ்மார்ட்போனின் அடிப்படை 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் மெமரி மாறுபாட்டு சீனா சந்தையில் CNY 1,799 என்ற விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 20,900 என்ற விலையில் வெளியிடப்பட்டது. இது 6.6' இன்ச் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது சக்தி வாய்ந்த MediaTek Dimensity 8100 சிப்செட் உடன் வருகிறது. இது 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,080mAh பேட்டரி மற்றும் மூன்று பின்புற கேமரா அமைப்பையும் பெறுகிறது.

ஒரு மணி நேரத்தில் சுமார் 270,000 யூனிட் விற்பனை

ஒரு மணி நேரத்தில் சுமார் 270,000 யூனிட் விற்பனை

புதிதாக வெளியிடப்பட்ட Redmi Note 11T Pro, விற்பனைக்கு வந்த ஒரு மணி நேரத்தில் சுமார் 270,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்றுள்ளதாகச் சீன மைக்ரோ பிளாக்கிங் இணையதளமான Weibo இல் ரெட்மியின் பொது மேலாளர் Lu Weibing ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார். Redmi Note 11T Pro+ உடன் மே 24 அன்று இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. Redmi Note 11T Pro இன் ஆஸ்ட்ரோ பாய் லிமிடெட் பதிப்பும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

உங்கள் போனை எப்படிப் பிடித்துப் பயன்படுத்துகிறீர்கள்? உங்களைப் பற்றிய உண்மை இது தான்.. தெரிஞ்சுக்கோங்க..உங்கள் போனை எப்படிப் பிடித்துப் பயன்படுத்துகிறீர்கள்? உங்களைப் பற்றிய உண்மை இது தான்.. தெரிஞ்சுக்கோங்க..

ரெட்மி நோட் 11டி ப்ரோ ஆஸ்ட்ரோ பாய் லிமிடெட் பதிப்பு

ரெட்மி நோட் 11டி ப்ரோ ஆஸ்ட்ரோ பாய் லிமிடெட் பதிப்பு

ரெட்மி நோட் 11டி ப்ரோ ஆஸ்ட்ரோ பாய் லிமிடெட் பதிப்பு ஜூன் 18 முதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 10,000 யூனிட்கள் மட்டுமே வாங்குவதற்குக் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. Redmi Note 11T Pro ஆனது சீனாவில் CNY 1,799 விலையில் 6GB RAM + 128GB இன்டெர்னல் மெமரி மாறுபாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் மெமரியின் விலை CNY 1,899 (தோராயமாக ரூ. 22,000) ஆகும். அதேபோல், இதன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் மெமரி மாறுபாட்டின் விலை CNY 2,099 (தோராயமாக ரூ. 24,300) ஆகும்.

உங்கள் போனை எப்படிப் பிடித்துப் பயன்படுத்துகிறீர்கள்? உங்களைப் பற்றிய உண்மை இது தான்.. தெரிஞ்சுக்கோங்க..உங்கள் போனை எப்படிப் பிடித்துப் பயன்படுத்துகிறீர்கள்? உங்களைப் பற்றிய உண்மை இது தான்.. தெரிஞ்சுக்கோங்க..

ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 5G சிப்செட்

ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 5G சிப்செட்

இந்த ஸ்மார்ட்போன் சில்வர், மிட்நைட் டார்க்னஸ் மற்றும் டைம் ப்ளூ என்ற மூன்று வண்ண வகைகளில் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 5G சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 67W வேகமாக சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,080mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. Redmi Note 11T Pro ஆனது 144Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 270Hz தொடு மாதிரி வீதத்துடன் 6.6-இன்ச் FHD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ரூ.8,000 விலைக்குள் கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்.. குறைந்த விலையில் சிறப்பான அனுபவம்..ரூ.8,000 விலைக்குள் கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்.. குறைந்த விலையில் சிறப்பான அனுபவம்..

Redmi Note 11T ப்ரோ கேமரா அம்சம்

Redmi Note 11T ப்ரோ கேமரா அம்சம்

கேமரா அம்சத்தை பற்றிப் பார்க்கையில், இது 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் ஷூட்டருடன் மூன்று உண்மையான கேமரா உள்ளமையைப் பெறுகிறது. முன்பக்கத்தில், ஸ்மார்ட்போன் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைப் பெறுகிறது. இப்படி, பல மிரட்டலான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வந்துள்ளது. இந்தியா மற்றும் உலகின் பிற பகுதிகளில் Redmi Note 11T ப்ரோ கிடைப்பது குறித்த விவரங்களை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

Best Mobiles in India

English summary
Redmi Note 11T Pro Reportedly Sold Over 270000 Units in China in First Hour of Sale : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X