குடியரசுத் தினத்தில் வெளியாகும் ரெட்மி நோட் 11 சீரிஸ்- 3 மாடல், 4 வேரியண்ட்கள், 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்!

|

ரெட்மி நோட் 11 தொடர் உலகளாவிய வெளியீடு ஜனவரி 26 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சியோமி நிறுவனம் புதிய ரெட்மி நோட் சீரிஸ் மாடல்கள் கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகளாவிய சந்தைகளில் ரெட்மி நோட் 11 தொடர் குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியோடு வரும் என கூறப்படுகிறது. சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 11 தொடர் மீடியாடெக் எஸ்ஓசி மூலம் அறிமுகம் செய்யப்பட்டது. உலகளாவிய மாறுபாடு சீன மாறுபாட்டை விட வேகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி நோட் 11 சீரிஸ் குறித்த பல்வேறு வதந்தி தகவல்கள் தொடர்ந்து வெளியாகின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரெட்மி நோட் 11 சீரிஸ் உலகளாவிய அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம்

ரெட்மிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம்

ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றன. இந்தியா மட்டுமின்றி பல நாட்டு சந்தைகளில் ரெட்மி ஸ்மார்ட்போன் பிரபலமடைய காரணம் ரெட்மி நோட் வகை ஸ்மார்ட்போன்களும், நிறுவனம் பட்ஜெட் விலை முதல் ப்ரீமியம் ரக விலைகளில் ஸ்மார்ட்போன்களை புதுப்புது அம்சள்களோடு அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்திய பேசு பொருளாக இருக்கும் சியோமி ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சாதனங்கள் ஜனவரி 26 ஆம் தேதி உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்.

ரெட்மி நோட் 11, ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 11 ப்ரோ +

ரெட்மி நோட் 11, ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 11 ப்ரோ + ஆகிய மூன்று சாதனங்கள் இந்த தொடரில் இடம்பெறும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த சாதனம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ரெட்மி நோட் 11 தொடரின் உலகளாவிய வெளியீட்டு நிகழ்வு ஜனவரி 26 ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 5:30 மணிக்கு நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் ரெட்மி மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை உலக சந்தையில் அறிமுகம் செய்யும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி

ரெட்மி நோட் 11 தொடர் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதியை ரெட்மி அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தின் மூலம் அறிவித்துள்ளது. இதில் பதிவிட்ட புகைப்படங்களில் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனின் பின்புற தட்டையான விளிம்புகளை காட்டுகிறது. இந்த படத்தில் "ரைஸ் டு தி சேலஞ்ச்" என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் வெளியீட்டு விழாவிற்கு என மைக்ரோ சைட்டையும் தயார் செய்திருக்கிறது.

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் அமோலெட் டிஸ்ப்ளே

ரெட்மி நோட் 11 தொடரின் உலகளாவிய மாறுபாடுகள் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் அமோலெட் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் 108 எம்பி முதன்மை கேமராவை கொண்டிருக்கும் எனவும் இது 67 வாட்ஸ் மற்றும் 120 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கும் என அறிகுறிகள் தெரிவிக்கின்றன. சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை பார்க்கலாம்.

6.6 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே வசதி

6.6 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே வசதி

ரெட்மி நோட் 11 அம்சங்கள் குறித்து பார்க்கையில், 6.6 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே வசதியோடு 190 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. இது முழு எச்டி ப்ளஸ் தெளிவுத்திறன் வசதியோடு சிறந்த காட்சி அனுபவத்தை வழங்குகிறது. சாதனம் 5ஜி ஆதரவோடு ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்ஷன் 810 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.

50 எம்பி முதன்மை கேமரா

50 எம்பி முதன்மை கேமரா

ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனானது 50 எம்பி சென்சார் மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் உள்ளிட்ட கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு இந்த ஸ்மார்ட்போனில் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு ரெட்மி வழங்குகிறது. ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது.

ரெட்மி நோட் 11 ப்ரோ: அம்சங்கள்

ரெட்மி நோட் 11 ப்ரோ: அம்சங்கள்

ரெட்மி நோட் 11 ப்ரோ ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. 6.67 இன்ச் அமோலெட் பேனல் உடன் வருகிறது. டிஸ்ப்ளேவில் பொருத்தப்பட்ட பஞ்ச் ஹோல் வடிவமைப்போடு 16 எம்பி செல்பி கேமரா வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 108 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார் வசதியோடு வருகிறது. ரெட்மி நோட் 11 ப்ரோ ஸ்மார்ட்போனானது ஆக்டோகோர் டைமன்சன் 920 செயலி மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் ஆனது 4500 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தோடு இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப ஆதரவோடு வருகிறது.

120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜ் ஆதரவு

120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜ் ஆதரவு

ரெட்மி நோட் 11 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து பார்க்கையில், 120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 108 எம்பி முதன்மை கேமரா வசதியோடு வருகிறது. இந்த தொடரின் டாப் எண்ட் மாடல் ஆனது டைமன்சன் 920 செயலி மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தோடு வருகிறது. இந்த சாதனமானது 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜ் ஆதரவோடு வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Redmi Note 11 Series Set to Launch on January 26 With Three Models, 108Mp Primary Camera, 120W Fast Charging and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X