அடுத்த சம்பவம்- 67 வாட்ஸ் சார்ஜிங், 108எம்பி கேமரா உடன் ரெட்மி நோட் 11 ப்ரோ, நோட் 11 ப்ரோ+: மார்ச் 9 உறுதி!

|

ரெட்மி நோட் 11 ப்ரோ இந்திய வெளியீடு மார்ச் 9 ஆம் தேதி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ரெட்மி நோட் 11 ப்ரோ தொடர்

ரெட்மி நோட் 11 ப்ரோ தொடர்

சியோமி தனது ரெட்மி நோட் 11 ப்ரோ தொடர் சாதனத்தின் இந்தியாவில் மார்ச் 9 ஆம் தேதி பகல் 12 மணிக்கு அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 11 ப்ரோ சாதனமானது 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 108 எம்பி பிரதான கேமரா, 5ஜி இணைப்பு ஆதரவு மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டிருக்கிறது.

மார்ச் 9 ஆம் தேதி அறிமுகம்

மார்ச் 9 ஆம் தேதி அறிமுகம்

சியோமி தனது ரெட்மி நோட் 11 ப்ரோ தொடர் இந்தியாவில் மார்ச் 9 ஆம் தேதி பகல் 12 மணிக்கு அறிமுகமாகும் என அறிவித்திருக்கிறது. இந்த பிராண்ட் முன்னதாகவே இந்தியாவில் மூன்று ரெட்மி நோட் 11 வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொடரில் ரெட்மி நோட் 11 எஸ், ரெட்மி நோட் 11டி மற்றும் ரெட்மி நோட் 11 ஆகியவை இடம்பெற்றது. தற்போது இந்த தொடரின் கீழ் ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 11 ப்ரோ ப்ளஸ் ஆகிய இரண்டும் 5ஜி ரெடி அம்சத்தோடு வரும் என நிறுவனத்தின் சமூவக வலைதள பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

ரெட்மி நோட் 11 ப்ரோ 5ஜி மற்றும் 4ஜி பதிப்புகள்

ரெட்மி நோட் 11 ப்ரோ 5ஜி மற்றும் 4ஜி பதிப்புகள்

ரெட்மி நோட் 11 ப்ரோ தொடர் முன்னதாகவே சீன சந்தையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ரெட்மி நோட் 11 ப்ரோ 5ஜி மற்றும் 4ஜி பதிப்புகள் உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சியோமியின் டீஸர் ரெட்மி நோட் 11 ப்ரோ தொரின் சில முக்கிய அம்சங்களை குறிப்பிட்டுக்காட்டுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், 108 எம்பி பிரதான கேமரா, 5ஜி இணைப்பு மற்றும் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. சியோமி தனது அதிகாரப்பூர்வ இந்திய வலைதளத்தில் நிகழ்வின் பதிவுப் பக்கத்தை இயக்கத் தொடங்கியுள்ளது.

ரெட்மி நோட் 11 ப்ரோ, ரெட்மி நோட் 11 ப்ரோ ப்ளஸ்

ரெட்மி நோட் 11 ப்ரோ, ரெட்மி நோட் 11 ப்ரோ ப்ளஸ் சாதனத்தில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். ரெட்மி நோட் 11 ப்ரோ தொடர் ஸ்மார்ட்போன் ஆனது 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 320 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்துடன் வருகிறது. இந்த அம்சங்களானது ப்ரோ மற்றும் ப்ரோ ப்ளஸ் ஆகிய இரண்டு வகைகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனங்களின் சீன மாறுபாடுகளானது மீடியாடெக் டைமன்சிட்டி 920 செயலி மூலம் இயக்கப்பட்டாலும், ரெட்மி நோட் 11 ப்ரோ 5ஜிக்கான உலகளாவிய மாறுபாடு குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 செயலி மூலம் இயக்கப்படுகிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ டி1 5ஜி சாதனத்திலும் இதே சிப்செட் பொருத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ரெட்மி நோட் 11 ப்ரோ சாதனத்தின் 5ஜி அல்லாத பதிப்பு மீடியாடெக் ஹீலியோ ஜி96 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

பின்புறத்தில் 108 எம்பி கேமரா

பின்புறத்தில் 108 எம்பி கேமரா

ரெட்மி நோட் 11 ப்ரோ தொடரின் பின்புறத்தில் 108 எம்பி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. ப்ரோ மற்றும் ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் வெவ்வேறு கேமரா அமைப்புகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 11 ப்ரோ ஸ்மார்ட்போனானது 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Redmi Note 11 Pro, Redmi Note 11 Pro+ Smartphone Set to Launch on March 9: Expected Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X