120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவருகிறதா Redmi Note 11 சீரிஸ்.. விலை இதுவாக இருக்கலாம்..

|

ரெட்மி நோட் 11 அக்டோபர் 28 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் வரிசையுடன் ரெட்மி வாட்ச் 2 சாதனமும் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்வை முன்னிட்டு புதிய சலுகைகளை நிறுவனம் டீஸ் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. Redmi Note 11 தொடர் போஸ்டர் வடிவமைப்பு சில முக்கிய விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது. அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளலாம். எதற்காக நீங்கள் ரெட்மி நோட் 11 சீரிஸ் அறிமுகத்திற்குக் காத்திருக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

Redmi Note 11 ஸ்மார்ட்போன் மற்றும் ரெட்மி வாட்ச் 2 அறிமுகம்

Redmi Note 11 ஸ்மார்ட்போன் மற்றும் ரெட்மி வாட்ச் 2 அறிமுகம்

ரெட்மி வாட்ச் 2 முந்தைய மாடலை விடப் பெரிய AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது என்று டீஸ் செய்யப்பட்டுள்ளது. நமக்குக் கிடைத்த தகவலின் படி, ரெட்மி வாட்ச் 2 முந்தைய மாடலை விட சிறிய அளவு மாற்றத்துடன் பெரிய டிஸ்பிலேவை கொண்டுள்ளது. அதேபோல், Redmi Note 11 தொடரில் பல மாடல்கள் இருக்கலாம் என்று கசிவுகள் தெரிவிக்கின்றன, மேலும் Redmi Note 11 வரிசையில் Pro மற்றும் ப்ரோ பிளஸ் மாடல்களை Redmi கொண்டிருக்கும் என்று நிறுவனத்தின் பொது மேலாளர் லூ வைபிங் உறுதிப்படுத்தியுள்ளார்.

ரெட்மி வாட்ச் 2 பெரிய டிஸ்பிளேவுடன் அறிமுகமா?

ரெட்மி வாட்ச் 2 பெரிய டிஸ்பிளேவுடன் அறிமுகமா?

ரெட்மி வாட்ச் 2 மற்றும் ரெட்மி நோட் 11 ப்ரோவின் 8 ஜிபி + 128 ஜிபி சேமிப்பக விருப்பத்தைப் பற்றிய பட்டியலை மறுபதிவு செய்ய வைபிங் Weibo பக்கத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். ரெட்மி நோட் 11 ப்ரோ+ வேரியண்டிற்கும் இதேபோன்ற மறுபதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வார இறுதியில் ரெட்மி நோட் 11 தொடரில் இரண்டு ப்ரோ மாடல்கள் வெளியிடப்படும் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. நிர்வாகி பல டீசர் போஸ்டர்களையும் பகிர்ந்துள்ளார். இது NFC, ப்ளூடூத் v5.2 மற்றும் Wi-Fi 6 ஆதரவு இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

உங்கள் WhatsApp சாட்டை ஏன் Google Drive-ல் இருந்து நீக்குவது சிறந்தது? காரணம் இருக்கு மக்களே..உங்கள் WhatsApp சாட்டை ஏன் Google Drive-ல் இருந்து நீக்குவது சிறந்தது? காரணம் இருக்கு மக்களே..

120W கொண்ட பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

120W கொண்ட பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

இந்த தொடர் எக்ஸ் ஆக்சிஸ் லீனியர் மோட்டார் மற்றும் 120W கொண்ட பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை ஆதரிக்கும் என்று டீஸ் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, Xiaomi நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லெய் ஜூன் ஒரு புதிய இடுகையைப் பகிர்ந்துள்ளார், இதில் Redmi Note 11 தொடரில் 3.5mm ஆடியோ ஜாக் இருப்பதை டீஸ் செய்துள்ளார். மேலும், நிர்வாகி தொலைப்பேசியின் மேல் பகுதியைக் காட்டும் டீஸர் போஸ்டரைப் பகிர்ந்துள்ளார். இது ஆடியோ ஜாக், ஜேபிஎல்-டியூன் செய்யப்பட்ட ஸ்பீக்கர் கிரில் மற்றும் மைக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ரெட்மி நோட் 11 விலை பற்றிய சில தகவல்

ரெட்மி நோட் 11 விலை பற்றிய சில தகவல்

முந்தைய டீஸர்களைப் போலவே இந்த ஃபோனும் மேட் கிரே ஃபினிஷ் மற்றும் சற்றே நீட்டிய கருப்பு நிற கேமரா மாட்யூலைக் கொண்டுள்ளது. ரெட்மி நோட் 11 தொடர் இந்த விஷயத்தில் விதிவிலக்காக இருக்கும் என்று கூறி, இந்த நாட்களில் பல தொலைப்பேசிகள் 3.5 மிமீ ஆடியோ ஜாக்கைத் தக்கவைக்கவில்லை என்று ஜுன் கூறியுள்ளார்.
முந்தைய கசிவுகள் ரெட்மி நோட் 11 விலை பற்றிய சில தகவலையும் வெளியிட்டிருந்தது.

ஜியோவையே திணறடித்த Vi திட்டம்.. நன்மையை கேட்டா நீங்களே யோசிப்பிங்க.. Vi சிம் வாங்கலாமோ?ஜியோவையே திணறடித்த Vi திட்டம்.. நன்மையை கேட்டா நீங்களே யோசிப்பிங்க.. Vi சிம் வாங்கலாமோ?

Redmi Note 11 Pro+ விலையே இவ்வளவு தானா?

Redmi Note 11 Pro+ விலையே இவ்வளவு தானா?

Redmi Note 11 Pro ஆனது CNY 1,599 (தோராயமாக ரூ. 18,700) என்ற தொடக்க விலையைக் கொண்டிருக்கலாம்.மேலும் Redmi Note 11 Pro+ விலை பற்றிப் பார்க்கையில் இது CNY 2,199 (தோராயமாக ரூ. 25,700) விலையில் வெளிவரக்கூடும். Redmi Note 11 ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 810 சிப்செட் உடனும், Redmi Note 11 Pro சாதனம் MediaTek Dimensity 920 சிப்செட் உடனும் மற்றும் Redmi Note 11 Pro+ சாதனம் MediaTek Dimensity 1200 AI சிப்செட் உடனும் இயக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. மூன்று ரெட்மி நோட் போன்களும் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேக்களுடன் வரும் மற்றும் 5,000.

256 ஜிபி வரையிலான உள் சேமிப்பு

256 ஜிபி வரையிலான உள் சேமிப்பு

5,000 எம்ஏஎச் பேட்டரிகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கூடுதலாக, மூன்று ரெட்மி மாடல்களிலும் 256 ஜிபி வரையிலான உள் சேமிப்புடன் வரலாம். இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு பின்னர் இதன் அசல் விலை மற்றும் விபரங்களை உங்களுக்கு விரைவில் அப்டேட் செய்கிறோம். அதுவரை எங்கள் கிஸ்பாட் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
Redmi Note 11 Pro Models Confirmed With 120W Fast Charging Spec With Expecting Price Details : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X