Home
News

தட்டித் தூக்கலாம்: பட்ஜெட் விலையில் ரெட்மி நோட் 11, நோட் 11எஸ் அறிமுகம்- 8ஜிபி ரேம், 108 எம்பி கேமரா!

ரெட்மி நோட் 11, நோட் 11எஸ் ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, குவாட் கேமரா அமைப்போடு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ரெட்மி நோட் 11 மற்றும் ரெட்மி நோட் 11 எஸ்

ரெட்மி நோட் 11 மற்றும் ரெட்மி நோட் 11 எஸ்

ரெட்மி நோட் 11 மற்றும் ரெட்மி நோட் 11 எஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் மலிவான விலையோடு சிறந்த அம்சங்களுடன் பேக் செய்யப்பட்டுள்ளன. குவாட் ரியர் கேமரா அமைப்பு, எம்ஐயூஐ 13 உடனான ஆண்ட்ராய்டு 11 ஆதரவு மற்றும் 1 டிபி வரை கூடுதல் மெமரி விரிவாக்க வசதியோடு வருகிறது.

ரெட்மி நோட் 11 விலை மற்றும் விற்பனை விவரங்கள்

ரெட்மி நோட் 11 விலை மற்றும் விற்பனை விவரங்கள்

இந்தியாவில் ரெட்மி நோட் 11, நோட் 11எஸ் விலை மற்றும் விற்பனை விவரங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் மலிவு விலையில் சிறந்த அம்சங்களோடு வருகிறது. நோட் 11 விலை குறித்து பார்க்கையில், இதன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை குறித்து பார்க்கையில் இது ரூ.13,499 ஆகவும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.14,499 ஆகவும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.15,999 ஆகவும் இருக்கிறது. பிப்ரவரி 11 முதல் இந்த ஸ்மார்ட்போனை ஹொரைசன் ப்ளூ, ஸ்பேஸ் ப்ளாக் மற்றும் ஸ்டார்பர்ஸ்ட் ஒயிட் வண்ண விருப்பங்களோடு வருகிறது.

ரெட்மி நோட் 11 எஸ் விலை மற்றும் விற்பனை விவரங்கள்

ரெட்மி நோட் 11 எஸ் விலை மற்றும் விற்பனை விவரங்கள்

அதேபோல் ரெட்மி நோட் 11எஸ் விலை குறித்து பார்க்கையில், 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.16,499 ஆகவும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.17,499 ஆகவும் இருக்கிறது. டாப் எண்ட் வேரியண்ட் ஆன 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.18,499 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஹொரைசன் ப்ளூ, போலார் ஒயிட் மற்றும் ஸ்பேஸ் பிளாக் வண்ண விருப்பத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 21 முதல் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போன்கள்க கிடைக்கும் தன்மை

ஸ்மார்ட்போன்கள்க கிடைக்கும் தன்மை

இந்த ஸ்மார்ட்போன்களின் இரண்டு யூனிட்களும் அமேசான், எம்ஐ.காம், எம்ஐ ஹோம் ஸ்டோர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற சில்லறை விற்பனை நிலையங்களில் வாங்க கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் பேங்க் ஆஃப் பரோடா கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்கள் பயன்படுத்தி சாதனம் வாங்கும் போது ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

ரெட்மி நோட் 11 அம்சங்கள்

ரெட்மி நோட் 11 அம்சங்கள்

ரெட்மி நோட் 11 ஆனது 6.43 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1080x2400 பிக்சல்கள்) அமோலெட் டாட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 50 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா மற்றும் ஒரு ஜோடி 2 எம்பி சென்சார்கள் உள்ளிட்ட குவாட் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது. ஸ்மார்ட்போனின் பிற அம்சங்கள் குறித்து பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 13 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது பேட்டரி, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. நோட் 11 ஸ்மார்ட்போனில் 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி5.0 மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவோடு வருகிறது.

ரெட்மி நோட் 11எஸ் அம்சங்கள்

ரெட்மி நோட் 11எஸ் அம்சங்கள்

ரெட்மி நோட் 11எஸ் அம்சங்கள் குறித்து பார்க்கையில், ரெட்மி நோட் 11 எஸ் ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், 6.43 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1080x2400 பிக்சல்கள்) அமோலெட் டாட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனும் 108 எம்பி பிராதன கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா மற்றும் இரட்டை 2 எம்பி சென்சார்கள் இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எ்மபி செல்பி கேமரா வசதி இருக்கிறது.

மீடியாடெக் ஹீலியோ ஜி96 எஸ்ஓசி வசதி

மீடியாடெக் ஹீலியோ ஜி96 எஸ்ஓசி வசதி

ஹூட்டின் கீழ் ரெட்மி நோட் 11 எஸ் ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி96 எஸ்ஓசி வசதியோடு வருகிறது. கூடுதலாக ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் அம்சம் இருக்கிறது. இரண்டு மாடல்களும் ப்ரீமியம் அம்சங்களோடு இருந்தாலும் இதில் 5ஜி ஆதரவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.20,000 விலைப்பிரிவில் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான வாய்ப்பாகும். காரணம் உயர் ரக அம்சங்களோடு பட்ஜெட் விலையில் இந்த சாதனம் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Redmi Note 11, Note 11S Launched in India with 8GB RAM, 5000 mAh Battery, 108MP Camera: Price, Sale Date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X