விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் 11 4ஜி ஸ்மார்ட்போன்.!

|

ரெட்மி நிறுவனம் இந்தியாவில் புதிய ரெட்மி நோட் 11 4ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த ரெட்மி நோட் 11 4ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 11 4ஜி

ரெட்மி நோட் 11 4ஜி

ரெட்மி நோட் 11 4ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக்கொண்டு வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸமார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

பாப் அப் ரியர் கேமரா அம்சத்துடன் வெளிவரும் Oppo ஸ்மார்ட்போன்.. இப்படி ஒரு கேமராவை பார்த்திருக்கமாட்டீங்க..பாப் அப் ரியர் கேமரா அம்சத்துடன் வெளிவரும் Oppo ஸ்மார்ட்போன்.. இப்படி ஒரு கேமராவை பார்த்திருக்கமாட்டீங்க..

ரெட்மி நோட் 11 4ஜி

ரெட்மி நோட் 11 4ஜி ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1080x2400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

நினைத்துக்கூட பார்க்க முடியாது- எடுக்கப்பட்டதே விண்வெளியில் இருந்துதான்: வேற லெவல் சூரிய கிரகணம் புகைப்படம்!நினைத்துக்கூட பார்க்க முடியாது- எடுக்கப்பட்டதே விண்வெளியில் இருந்துதான்: வேற லெவல் சூரிய கிரகணம் புகைப்படம்!

இந்த ரெட்மி நோட் 11 4ஜி

இந்த ரெட்மி நோட் 11 4ஜி சாதனத்தில் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் தனித்துவமான கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

அதிரடி தள்ளுபடி- ஒன்பிளஸ் நோர்ட் 2, பேக் மேன் பதிப்பு, நோர்ட் சிஇ வாங்க சரியான நேரம்: உடனே முந்துங்கள்!அதிரடி தள்ளுபடி- ஒன்பிளஸ் நோர்ட் 2, பேக் மேன் பதிப்பு, நோர்ட் சிஇ வாங்க சரியான நேரம்: உடனே முந்துங்கள்!

ரெட்மி நோட் 11 4ஜி

ரெட்மி நோட் 11 4ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

இனி மேல இல்ல கீழ: அண்டர் டிஸ்ப்ளே கேமராவுடன் மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போன்- இதோ இன்னும் இரண்டே நாள்!இனி மேல இல்ல கீழ: அண்டர் டிஸ்ப்ளே கேமராவுடன் மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போன்- இதோ இன்னும் இரண்டே நாள்!

4ஜி, வைஃபை, புளூடூத் வி5.1, ஜிபிஎஸ், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி

4ஜி, வைஃபை, புளூடூத் வி5.1, ஜிபிஎஸ், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். மேலும் சமீபத்தில் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனின்
அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

வந்தது ஜூம் கால்., அட்டெண்ட் பண்ண எல்லாருக்கும் வேலை இல்ல- 900பேர் பணி நீக்கம்: என்ன நடந்தது?வந்தது ஜூம் கால்., அட்டெண்ட் பண்ண எல்லாருக்கும் வேலை இல்ல- 900பேர் பணி நீக்கம்: என்ன நடந்தது?

ரெட்மி நோட் 11டி 5ஜி

ரெட்மி நோட் 11டி 5ஜி

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்மார்ட்போனில் மிகவும்

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி உள்ளது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த
ஸ்மார்ட்போன் மாடல் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். ரெட்மி நோட் 11டி 5ஜி சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

உங்கள் போனில் டிஜிட்டல் ஆதாரை பதிவிறக்கம் செய்து சேமிப்பது எப்படி? இது கட்டாயம் தேவைப்படும்..உங்கள் போனில் டிஜிட்டல் ஆதாரை பதிவிறக்கம் செய்து சேமிப்பது எப்படி? இது கட்டாயம் தேவைப்படும்..

ரெட்மி நோட் 11டி 5ஜி

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும்புகைப்படங்களை எடுக்க முடியும்.

சபாஷ்., சரியான வாய்ப்பு: ரூ.13,000 தள்ளுபடி சார்- ஒன்பிளஸ் 9, 9 ப்ரோ சாதனத்தை உடனே சொந்தமாக்குங்கள்!சபாஷ்., சரியான வாய்ப்பு: ரூ.13,000 தள்ளுபடி சார்- ஒன்பிளஸ் 9, 9 ப்ரோ சாதனத்தை உடனே சொந்தமாக்குங்கள்!

வைஃபை 6, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-

5ஜி, வைஃபை 6, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை
கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Redmi Note 11 4G May Launching Soon in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X