Home
News

ரெட்மி நோட் 10டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்.!

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி நோட் 10டி ஸ்மார்ட்போன் மாடலை ரஷ்யாவில் அறிமுகம் செய்துள்ளது, விரைவில் இந்த சாதனம் அனைத்து சந்தைகளிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மூன்று பின்புற கேமராக்கள், தரமான சிப்செட் வசதி, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

ரெட்மி நோட் 10டி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 4ஜிபி/6ஜிபி ரேம்

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

Dimensity 700 SoC சிப்செட் வசதி

Dimensity 700 SoC சிப்செட் வசதி

இந்த ரெட்மி நோட் 10டி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 700 SoC சிப்செட் வசதி உள்ளது. மேலும்MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இயக்கத்திற்குமிகவும் அருமையாக இருக்கும்.

ரெட்மி நோட் 10டி கேமரா

ரெட்மி நோட் 10டி கேமரா

ரெட்மி நோட் 10டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமராவைக்கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

ரெட்மி நோட் 10டி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம்.

 4 ஜி, என்எப்சி, வைஃபை,

இரட்டை சிம், 4 ஜி, என்எப்சி, வைஃபை, புளூடூத் வி 5.1, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.20,500-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi Note 10T Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X