அடுத்து ஒரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்: பிப்ரவரி 6 அறிமுகமாகும் ரெட்மி நோட் 10எஸ்- 6ஜிபி ரேம், 108எம்பி கேமரா!

|

சியோமி நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் சியோமி 11டி ப்ரோ ஸ்மார்ட்போனை வெளியிட்டது. தற்போது இந்த பிராண்ட் ரெட்மி நோட் 11 எஸ் என அழைக்கப்படும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஸ்மார்ட்போனானது பிப்ரவரி 9 ஆம் தேதி நாட்டில் அறிமுகம் செய்யப்படும் என உறுதிப்பட தகவல்கள் தெரிவிக்கிறது. நோட் எஸ் ஸ்மார்ட்போனின் வாரிசாக ரெட்மி நோட் 11எஸ் இருக்கும் எனவும் இது அமோலெட் பேனல், 108 எம்பி பிரதான கேமரா மற்றும் பலவற்றைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விரிவான அம்சங்கள் குறித்த தகவல்களை பார்க்கலாம்.

ரெட்மி நோட் 11எஸ் இந்திய விலை

ரெட்மி நோட் 11எஸ் இந்திய விலை

91 மொபைல்ஸின் புதிய அறிக்கை டிப்ஸ்டர் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 11எஸ் ஆனது நாட்டில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 10 எஸ் சாதனத்தை விட ரூ.2000 அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. இதன் விலை ரூ.14999 ஆக இருக்கிறது. ரெட்மி நோட் 11 எஸ் ஸ்மார்ட்போனானது சுமார் ரூ.16,000 முதல் ரூ.17,000 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனானது அமேசான்.இன் மற்றும் எம்ஐ.காம் மூலமாக விற்பனைக்கு வரும் என அறிக்கை தகவல் தெரிவிக்கிறது.

ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்

ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்

ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 6.4 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே வசதி மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் செல்பி கேமரா சென்சாரை வைக்க பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி96 எஸ்ஓசி வசதியோடு வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜி உள்சேமிப்பு வசதியோடு வரும் எனவும் இது மைக்ரோ எஸ்டி கார்ட் மூலமாக மெமரி விரிவாக்க வசதியைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு 5000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

108 எம்பி முதன்மை கேமரா

108 எம்பி முதன்மை கேமரா

ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனின் பின்புற பேனலில் குவாட் கேமரா வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 108 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் இரட்டை 2 எம்பி கேமராக்கள் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 13 எம்பி செல்பி கேமரா வசதியைக் கொண்டிருக்கும் எனவும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் உடன் தனிப்பயனாக்கப்பட்ட ஸ்கின் அவுட் ஆஃப் பாக்ஸ் உடன் இயங்கும் எனவும் கூறப்படுகிறது.

ரெட்மி 10ஏ மற்றும் ரெட்மி 10சி

ரெட்மி 10ஏ மற்றும் ரெட்மி 10சி

சியோமி நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. ரெட்மி 10ஏ மற்றும் ரெட்மி 10சி ஆகியவை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் சாதனமாகும். நிறுவனத்தின் புதிய இடைநிலை ஸ்மார்ட்போன் ஆனது 50 எம்பி முதன்மை சென்சார் கொண்ட மூன்று கேமரா அமைப்பு உட்பட பல்வேறு சிறந்த அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

மீடியாடெக் சிப்செட் வசதி

மீடியாடெக் சிப்செட் வசதி

ரெட்மி 10ஏ, ரெட்மி 10சி சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்து வெளியான தகவல்களை பார்க்கலாம். ரெட்மி 10ஏ மற்றும் 10சி ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் சிப்செட் வசதியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியா, சீனா உள்ளிட்ட பிற உலக நாட்டு சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.12,000-க்கு குறைவாக இருக்கும் என அறிக்கைகள் தெரிவிக்கிறது.

Best Mobiles in India

English summary
Redmi Note 10S Specs and Price Range Leaked Before Its Launching: Here the Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X