மார்ச் 4: 108எம்பி கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி நோட் 10.!
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம் வரும் மார்ச்4-ம் தேதி புதிய ரெட்மி நோட் 10 மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் தற்போது வந்த தகவலின்படி ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் ஆனது
108எம்பி ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் வசதி இடம்பெறும் என்று கூறப்படுகிறது. பின்பு ஆணட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
மேலும் ரெட்மி நோம் 10 ஸ்மார்ட்போனில் 108எம்பி பிரைமரி கேமரா, 48எம்பி செகன்டரி கேமரா, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், கார்னிங் கொரில்லா கிளாஸ், MIUI 12 வசதி போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதற்குமுன்பு வெளிவந்த ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

அதேபோல் கருப்பு, நீலம் மற்றும் Bronze உள்ளிட்ட நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் சாதனத்தின் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
சியோமி ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் சாதனத்தின் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் அல்லது ஸ்னாப்டிராகன் 768ஜி சிப்செட் வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிப்செட் வசதி கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும்.

ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த LCD screens வசதி மற்றும் 120Hz refresh rate வசதி இருக்கும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் 5050எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications