அடுத்த மாதம் களமிறங்கும் ரெட்மி நோட் 10 சீரிஸ்: அம்சங்கள் எல்லாம் மிரட்டுது!

|

ரெட்மி நோட் 10 சீரிஸ் மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த தொடரில் ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ ஆகிய மாடல்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது.

வண்ண விவரங்கள்

வண்ண விவரங்கள்

ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் ஆஷ், வெள்ளை மற்றும் க்ரீன் வண்ண விருப்பங்களில் வருகிறது. ரெட்மி நோட் 10 ப்ரோ மாடல் ப்ரான்ஸ், ப்ளூ மற்றும் க்ரே வண்ண விருப்பங்களில் வருகிறது.

ரெட்மி நோட் 10 மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ

ரெட்மி நோட் 10 மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ

ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 2021 மார்ச் மாதம் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என ரெட்மி இந்தியா அறிவித்துள்ளது.ரெட்மி நோட் 10 தொடரில் ரெட்மி நோட் 10 மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் இடம்பெறுகிறது.

பெரிய கேமரா அமைப்பு

பெரிய கேமரா அமைப்பு

ரெட்மி நோட் 10 தொடர் குறித்து வெளியான டீசரில் இது பெரிய கேமரா அமைப்பை கொண்டுள்ளதாக தெரிகிறது. ரெட்மி நோட் 10 சீரிஸ் அமேசான் இந்தியா, எம்ஐ.காம் மற்றும் எம்ஐ ஆஃப்லைன் ஸ்டோர்களில் அறிமுகப்படுத்தப்படும்.

ஏலியன்ஸ் பூமிக்கு வந்து ரொம்ப நாளாச்சு: இந்த பொருள்தான் அதுக்கு ஆதாரம்- வானியலாளரின் அதிர்ச்சி தகவல்!ஏலியன்ஸ் பூமிக்கு வந்து ரொம்ப நாளாச்சு: இந்த பொருள்தான் அதுக்கு ஆதாரம்- வானியலாளரின் அதிர்ச்சி தகவல்!

ரேம் மற்றும் சேமிப்பு வசதி

ரேம் மற்றும் சேமிப்பு வசதி

ரெட்மி நோட் 10 மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோவின் ரேம், சேமிப்பு வசதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி, 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி வகைகளில் கிடைக்கிறது. ரெட்மி நோட் 10 ப்ரோ 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி ஆகிய மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்

ரெட்மி நோட் 10 ஆஷ், வெள்ளை மற்றும் கிரீன் வண்ண விருப்பங்களில் கிடைக்கும். ரெட்மி நோட் 10 ப்ரோ மாடல் ப்ரான்ஸ், ப்ளூ மற்றும் ஆஷ் வண்ண விருப்பங்களில் கிடைக்கும். ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் குறித்த வதந்திகளின்படி இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டுள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட்

ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இயக்கப்படும். இந்த ஸ்மார்ட்போனில் 5050 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi Note 10 Series Smartphone Going to Launch in India on March

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X