Xiaomi ரெட்மி நோட் 10 மார்ச் 4ம் தேதி அறிமுகமா? எங்கு முதலில் விற்பனைக்கு கிடைக்கும்?

|

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வரும் மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று சில லீக் செய்திகளைக் கடந்த வாரத்திலிருந்து நாம் கேட்டுவருகிறோம். நேற்று வரை, புதிய ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியச் சந்தையில் மார்ச் 10ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டு வந்தது, ஆனால், இப்போது அதற்கும் முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது.

ரெட்மி நோட் 10 சீரிஸ் அறிமுகம்

ரெட்மி நோட் 10 சீரிஸ் அறிமுகம்

ரெட்மி நோட் 10 சீரிஸ் வரிசையில் ரெட்மி நோட் 10 மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ ஆகிய இரண்டு மாடல்களை நாம் இந்திய சந்தையில் எதிர்பார்க்கலாம். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கான டீஸர் விளம்பரம் இப்போது அமேசான் வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளது. இதில் மார்ச் 10ம் தேதி ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது என்று கிஸ்மோசீனா வலைத்தளம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

மாற்றப்பட்ட அறிமுகம் தேதி இது தான்

மாற்றப்பட்ட அறிமுகம் தேதி இது தான்

ஆனால், இன்று வெளியாகியுள்ள புதிய தகவலின்படி இந்த புதிய ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வரும் மார்ச் 4ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காரணம், இம்முறை இந்த அறிமுக தேதி சியோமி நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது. Redmi இந்தியா டிவிட்டர் கணக்கின் மூலம் இந்த செய்தியை சியோமி துணைத் தலைவரும், இந்தியாவின் நிர்வாக இயக்குநருமான, மனு குமார் ஜெயின் ட்வீட் செய்துள்ளார்.

தென்னாப்பிரிக்க கட்டிட இடிபாடுகளில் 200000 ஆண்டு டெஸ்லா தொழில்நுட்பம்!தென்னாப்பிரிக்க கட்டிட இடிபாடுகளில் 200000 ஆண்டு டெஸ்லா தொழில்நுட்பம்!

ரெட்மி நோட் 10 மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்டோரேஜ்

ரெட்மி நோட் 10 மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்டோரேஜ்

ரெட்மி நோட் 10 சீரிஸ் அமேசான் இந்தியா, Mi.com மற்றும் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் Mi ஸ்டோர்களில் பிரத்தியேகமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும். புதிய ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளில் வரும். அதேபோல், ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய மூன்று வகைகளில் வர உள்ளது.

சில முக்கிய சிறப்பம்சங்கள்

சில முக்கிய சிறப்பம்சங்கள்

ரெட்மி நோட் 10 க்ரெய், வைட் மற்றும் க்ரீன் வண்ண விருப்பங்களில் வரும், ரெட்மி நோட் 10 ப்ரோ மாடல் பிரான்ஸ், ப்ளூ மற்றும் க்ரேய் வண்ணங்களில் வரும். இதன் சில முக்கிய சிறப்பம்சங்களாக ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய எரிமலையைப் படம்பிடித்து பூமிக்கு அனுப்பிய ஹோப் விண்கலம்.. புகைப்படம் இதோ..செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய எரிமலையைப் படம்பிடித்து பூமிக்கு அனுப்பிய ஹோப் விண்கலம்.. புகைப்படம் இதோ..

ஸ்னாப்டிராகன் 732 ஜி சிப்செட்

ஸ்னாப்டிராகன் 732 ஜி சிப்செட்

இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 732 ஜி சிப்செட் உடன் 5,050 எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கும். இது ஆண்ட்ராய்டு 11 மேல் MIUI 12 இயங்கும் இயங்குதளத்துடன் வரும். இந்த ஸ்மார்ட்போன் என்ன விலையில் வெளியாகும் என்பது குறித்த சரியான தகவல் இன்னும் வெளியாகவில்லை, வரும் வாரங்களில் விலை பற்றிய சில லீக்ஸ் தகவலை நாம் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Redmi Note 10 Series India Launch Set for March 4 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X