ரெட்மி நோட் 10 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்.. எப்போது தெரியுமா?
இந்தியாவில் ரெட்மி நோட் 10 சீரிஸ் வெளியீட்டு அதன் முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக சியோமி நிர்வாகிகளால் டீஸ் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் தொடர் "ஸ்மூத்தேஸ்ட் (smoothest)" அனுபவத்தை வழங்கும் என்று டீஸ் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 9 சீரிஸ் வரிசையின் வாரிசாக இருக்கும் ரெட்மி நோட் 10 சீரிஸில் வழக்கமான ரெட்மி நோட் 10 மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ என்று இரண்டு மாடல்கள் வெவ்வேறு வேரியண்ட் விருப்பத்துடன் அறிமுகம் செய்யப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில், ரெட்மி நோட் 10 ப்ரோ குவால்காம் ஸ்னாப்டிராகன் 732 சிப்செட் உடனும், 5050mAh பேட்டரியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 8 ஜிபி ரேம் வரை கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்தியாவில் ரெட்மி நோட் 10 தொடரை அறிமுகப்படுத்த பரிந்துரைக்க ஷியோமி இந்தியா நிர்வாக இயக்குனர் மனும்குமார் ஜெயின் மற்றும் ரெட்மி பிசினஸ் நிறுவனத்தின் தலைவர் சினேகா டெய்ன்வாலா டீஸர் வீடியோக்களை ட்வீட் செய்துள்ளனர்.
பிப்ரவரி 10ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு வெளியீடு குறித்த அறிவிப்பு நடைபெறும் என்று ஜெயின் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். புதிய ஸ்மார்ட்போன் பற்றிய குறிப்பிட்ட விவரங்களை டீஸர் வீடியோக்கள் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரெட்மி நோட் 10 மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ ஆகிய இரண்டிலும் 4 ஜி மற்றும் 5 ஜி விருப்பங்கள் உள்ளன என்று வதந்திகள் பரவியுள்ளது.


Click it and Unblock the Notifications