விரைவில் வரும் ரெட்மி நோட் 10ப்ரோ 5ஜி: விலை குறைவுதான் அம்சம் சிறப்பு!

|

ரெட்மி ஸ்மார்ட்போனுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். ரெட்மி ஸ்மார்ட்போன்களும் புதுப்புது அம்சங்களோடு தொடர்ந்து ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. இதன்படி ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி முதற்கட்டமாக ஸ்பெயினில் வரக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி

ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி

ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் எஸ்ஓசி உடன் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை. இருப்பினும் அதன் வெளியீட்டை குறிக்கும் ஒரு படம் சமூகவலைதளங்களில் வெளியானது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி எஸ்ஓசி

குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி எஸ்ஓசி

ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வரக்கூடும் எனவும் இது 4ஜி வேரியண்ட் உடன் வரும் எனவும் கூறப்படுகிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 10 மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஆகியவைகளுடன் மார்ச் மாதம் அறிமுகமானது.

வழக்கமான வடிவமைப்பு அம்சம்

வழக்கமான வடிவமைப்பு அம்சம்

ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி வெளியீடு குறித்த புகைப்படத்தை டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் டுவிட் செய்துள்ளார். இந்த விளம்பரப்படம் ஸ்பானிஷ் மொழியில் வருகிறது. அதேபோல் இந்த படத்தில் இதன் வடிவமைப்பு வழக்கமான ரெட்மி நோட் 10 ப்ரோ மாறுபாட்டிற்கு ஒத்ததாக இருக்கும் எனவும் இது உள்நாட்டில் புதிய வன்பொருளை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்சேமிப்பு

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்சேமிப்பு

ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி எஸ்ஓசி உடன் வரலாம் என டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. சியோமி தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்தில் எந்தஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

சியோமி ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி மாதத்தில் இந்திய தரநிலை பணியகம் (பிஐஎஸ்) தளத்தில் தோன்றியதாக கூறப்படுகிறது. இந்தியாவில் முன்னதாக இதன் 4ஜி வேரியண்ட் சாதனம் மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல் மார்ச் மாதத்தில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தையில் ரெட்மி நோட் 10 5ஜி சாதனத்தை அறிவித்தது. இந்த சாதனத்தின் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.14,700 ஆக இருக்கிறது.

ரெட்மி நோட் 10 ப்ரோ 4ஜி வேரியண்ட் விலை

ரெட்மி நோட் 10 ப்ரோ 4ஜி வேரியண்ட் விலை

ரெட்மி நோட் 10 ப்ரோ 4ஜி வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.15,999 ஆக இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் 1,080x2,400 பிக்சல்கள் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடனான குவார் ரியர் கேரமா அமைப்போடு வருகிறது. இது ஆக்டோகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி எஸ்ஓசி உடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஹை வேரியண்ட்டாக இருக்கிறது.

ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி விவரங்கள்

ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி விவரங்கள்

ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 10 தொடரில் புதிய சாதனமாக ரெட்மி நோட் 10 எஸ் சாதனத்தை மே 13 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் 5ஜி வேரியண்ட் இந்தியாவில் கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தவில்லை.

File Images

Best Mobiles in India

English summary
Redmi Note 10 Pro 5G May Launching Soon in India with this Specification

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X