சத்தமில்லாமல் ரூ. 12,749 விலையில் விற்பனைக்கு வருகிறதா Redmi Note 10 Lite.. சான்ஸ் எப்போது தெரியுமா?

|

சியோமி நிறுவனம் சத்தமே இல்லாமல், மிகவும் அமைதியாக ஒரு புதிய ஸ்மார்ட்போன் மாடலை தனது நோட் 10 சீரிஸ் வரிசையில் மலிவு விலையில் அற்புதமான முக்கிய அம்சங்களோடு இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. சியோமி நிறுவனம் புதிதாக ரெட்மி நோட் 10 லைட் என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை அக்டோபர் 2 ஆம் தேதியான நாளை நடைபெறுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை என்ன? இதன் சிறப்பம்சம் என்ன என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம்.

புதிய ரெட்மி நோட் 10 லைட் சத்தமில்லாமல் விற்பனைக்கு வருகிறதா?

புதிய ரெட்மி நோட் 10 லைட் சத்தமில்லாமல் விற்பனைக்கு வருகிறதா?

சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ரெட்மி நோட் 10 லைட் சாதனம் மூன்று ஸ்டோரேஜ் வகைகளில், நான்கு வெவ்வேறு வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டு, நாளை முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது. இது ரெட்மியிலிருந்து மீண்டும் வெளிவரும் ஒரு மலிவு விலை ஸ்மார்ட்போனாகும். இது நோட் 10 தொடர் ஸ்மார்ட்போன் வரிசையில் புதிதாக சேர்க்கிறது. இந்த சாதனத்தின் விலைக்கேற்ப சரியான ஒரு சிப்செட் மற்றும் ஒரு பெரிய பேட்டரியை பேக் செய்கிறது.

ரெட்மி நோட் 10 லைட் 4ஜி ஸ்மார்ட்போனா இல்லை 5ஜி ஸ்மார்ட்போனா?

ரெட்மி நோட் 10 லைட் 4ஜி ஸ்மார்ட்போனா இல்லை 5ஜி ஸ்மார்ட்போனா?

இந்திய சந்தையில் தற்போது 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான வருகை அதிகரித்துள்ளது. சாம்சங், சியோமி போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே பட்ஜெட் விலையில் சில 5ஜி சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. ஆனால், ரெட்மி நோட் 10 லைட் சாதனம் ஒரு 5 ஜி ஸ்மார்ட்போன் சாதனம் அல்ல என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இது 4ஜி சேவையில் இயங்கும் சாதனமாகும். ரெட்மி நோட் 10 லைட் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இது 3.5 மிமீ ஆடியோ ஜாக் உடன் வருகிறது. இந்த புது ஸ்மார்ட்போனின் முழு விவரக்குறிப்புகள் மற்றும் விலையைப் பற்றி இப்போது பார்ப்போம்.

ஜெயிச்சிட்டோம் மாறா.! சென்னை நிறுவனம் உருவாக்கிய முதல் மேட் இன் இந்தியா பறக்கும் கார்..! இளைஞர்கள் முயற்சி..!ஜெயிச்சிட்டோம் மாறா.! சென்னை நிறுவனம் உருவாக்கிய முதல் மேட் இன் இந்தியா பறக்கும் கார்..! இளைஞர்கள் முயற்சி..!

ரெட்மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் சிறப்பம்ச விவரம்

ரெட்மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் சிறப்பம்ச விவரம்

ரெட்மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் அதன் மலிவு விலையில் உங்களுக்கு 6.67' இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் DotDisplay உடன் வருகிறது. டிஸ்பிளேவைப் பத்திரமாக பாதுகாக்க இதன் மேலே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பது வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 10 லைட் சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட் மூலம் இயங்குகிறது. இந்த சாதனம் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி கொண்ட இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இயக்கப்படுகிறது.

மலிவு விலையில் குவாட் கேமரா அமைப்பா?

மலிவு விலையில் குவாட் கேமரா அமைப்பா?

ரெட்மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஒரு குவாட்-கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது, இதில் 48 எம்பி முதன்மை சென்சார், 8 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார், 5 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இது 4K தரத்தில் 30fps இல் வீடியோ ரெகார்டிங் ஆதரவை ஆதரிக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்க கேமரா சென்சார் 16 எம்பி லென்ஸ் உடன் வருகிறது. இது 120 எஃப்.பி.எஸ் ஸ்லோ-செல்ஃபி மோடை ஆதரிக்கிறது என்று நிறுவனம் கூறியுள்ளது.

கிரேட் டையிங்: பூமி அழிவை நோக்கி நகர்கிறதா? விஞ்ஞானிகள் வெளியிட்ட திடுக்கிடும் உண்மை இது தான்..கிரேட் டையிங்: பூமி அழிவை நோக்கி நகர்கிறதா? விஞ்ஞானிகள் வெளியிட்ட திடுக்கிடும் உண்மை இது தான்..

இந்த விலையில் இவ்வளவு பெரிய பேட்டரி சக்தியா?

இந்த விலையில் இவ்வளவு பெரிய பேட்டரி சக்தியா?

இது சேமிப்பு விரிவாக்கத்திற்கான மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டுடன் வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் 5,020 எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது. இது மீண்டும் நோட் 9 ப்ரோவைப் போன்றது மற்றும் 18W வேகமான சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. இது ஆடியோவுக்கு 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் சார்ஜ் செய்வதற்கு யூஎஸ்பி டைப்-சி போர்ட்டை கொண்டுள்ளது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 உடன் அதன் மேல் MIUI 12 இல் இயங்கக்கூடியது. கைரேகை சென்சார் ஆற்றல் பட்டனின் மேல் பக்கத்தில் உள்ளது.

ரெட்மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் விலை என்ன?

ரெட்மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் விலை என்ன?

ரெட்மி நோட் 10 லைட் இந்தியாவில் மூன்று வெவ்வேறு வகைகளில் கிடைக்கிறது. இதன் முதல் பேசிக் வேரியண்ட் மாடல் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெறும் ரூ. 13,999 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் இரண்டாவது வேரியன்ட் மாடலான 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பம் வெறும் ரூ. 15,999 விலையில் கிடைக்கிறது. இதன் மூன்றாவது வேரியண்ட் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெறும் ரூ. 16,999 என்ற விலையில் கிடைக்கிறது.

வைரல் ஆகும் விசித்திரமான வைரல் ஆகும் விசித்திரமான "ஊது பாவை" தாவரத்தின் வீடியோ.. இது உண்மை தானா? என்ன சொல்கிறது ஆராய்ச்சி?

ரெட்மி நோட் 10 லைட் வெறும் ரூ. 12,749 விலையில் கிடைக்குமா?

ரெட்மி நோட் 10 லைட் வெறும் ரூ. 12,749 விலையில் கிடைக்குமா?

இது ஷாம்பெயின் கோல்ட், அரோரா ப்ளூ, கிளேசியர் வைட் மற்றும் இன்டர்ஸ்டெல்லர் பிளாக் ஆகிய நான்கு வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த சாதனம் அக்டோபர் 2 ஆம் தேதி அன்று அதிகாலை 12 மணிக்கு முதல் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இது சியோமி இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் போஸ்டர் தகவல் இந்த ரெட்மி நோட் 10 லைட் ஆரம்ப விலையாக ரூ. 12,749 விலையில் கிடைக்கும் என்பதை காட்டுகிறது. இது ஒரு அறிமுக சலுகையாக என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அறிமுக சலுகை யாருக்கெல்லாம் கிடைக்கும்?

அறிமுக சலுகை யாருக்கெல்லாம் கிடைக்கும்?

கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது இ-காமர்ஸ் தளமான அமேசானில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். இதை Mi.com மற்றும் நாடு முழுவதும் உள்ள ஆஃப்லைன் சில்லறைக் கடைகள் வழியாகவும் வாங்கலாம். வெளியீட்டு சலுகைகளின் ஒரு பகுதியாக, இந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் பயனர்களுக்கு ஒரு சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, பயனர்கள் எஸ்பிஐ கார்டைப் பயன்படுத்தி போனை வாங்கும்போது ரூ. 1,250 தள்ளுபடி பெறலாம். இது ஒரு அறிமுக கால சலுகை என்பதை மறக்காதீர்கள்.

Best Mobiles in India

English summary
Redmi Note 10 Lite Launched At A Starting Price Of Rs 13999 Will Go On Sale From October 2nd : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X