தீடீரென்று சத்தமில்லாமல் விலையை அதிகரித்த சியோமி.. இனி ரெட்மி நோட் 10 இன் விலை இது தான்..
சியோமி நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்போன் மாடல்களில் ஒரு சிறந்த ஸ்மார்ட்போன் மாடலான ரெட்மி நோட் 10 மீது நிறுவனம் தீடீரென்று விலை அதிகரிப்பை அமல்படுத்தியுள்ளது. அதாவது, ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விலை உயர்வைப் பெற்றுள்ளது. ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாறுபாட்டின் விலை இப்போது 12,499 ஆக அதிகரித்துள்ளது.

ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் மீது விலை அதிகரிப்பு
சத்தமில்லாமல் நிறுவனம் மேற்கொண்டுள்ள இந்த திடீர் விலை அதிகரிப்பிற்கு பின்னணியில் உள்ள சரியான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் இரண்டு வேரியண்ட் வகைகளின் மீதும் இந்த புதிய விலை அதிகரிப்பு தாக்கம் ஏற்பட்டுள்ளது. ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இனி ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் புதிய விலை இது தான்..
இதன் பேஸ் வேரியண்ட் மாடல் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடனும், இந்த ஸ்மார்ட்போன் ஹை வேரியண்ட் மாடலாக 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய மடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இரண்டு வேரியண்ட் மாடல்களும் இதுவரை முறையே ரூ. 11,999 மற்றும் ரூ.13,999 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், நிறுவனத்தின் விலை உயர்வுக்குப் பிறகு, இந்த ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடல் விலை இப்போது ரூ.14,499 ஆக அதிகரித்துள்ளது.

சத்தமில்லாமல் விலை இப்போது ரூ. 500 அதிகரித்துள்ளது
அதாவது ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் விலை இப்போது ரூ. 500 அதிகரித்துள்ளது. ரெட்மி நோட் 10 இன் புதிய விலை ஏற்கனவே அமேசான் இந்தியா மற்றும் Mi.com இல் நேரலையில் உள்ளது. இது இந்தியாவில் அக்வா கிரீன், ஃப்ரோஸ்ட் ஒயிட் மற்றும் ஷடோவ் பிளாக் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இனி ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனை வாங்க வேண்டுமெனில் நீங்கள் முன்பைவிட ரூ.500 செலுத்தியாக வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

ரெட்மி குறிப்பு 10 சிறப்பம்சம்
ரெட்மி நோட் 10 கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் 180 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் விகிதத்துடன் 6.43 இன்ச் எஃப்.எச்.டி சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரியால் ஆதரிக்கப்படுகிறது. இந்த சாதனம் 2.2Ghz ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 678 சிப்செட் மூலம் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இது அண்ட்ராய்டு 11 இல் MIUI 12 உடன் இயங்குகிறது.

கேமரா
ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன், 48 எம்.பி சோனி ஐஎம்எக்ஸ் 582 பிரைமரி சென்சார், 8 எம்.பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார், 2 எம்.பி மேக்ரோ கேமரா மற்றும் 2 எம்.பி டெப்த் சென்சார் கொண்ட குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இது 13 எம்.பி செல்ஃபி ஷூட்டரை பஞ்ச்-ஹோலில் வைத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications