ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் அதிகரித்தது.. புது ரேட் இது தான்..
சியோமியின் ரெட்மி பிராண்ட் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனை இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தியது. சியோமி ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சியோமியின் இந்த ஸ்மார்ட்போன் விலை இப்போது மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை என்ன என்று பார்க்கலாம்.

முதன்முறையாக, சியோமி ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாதத்தில் ரூ .500 விலை உயர்வு பெற்றது. இதன் விலை 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ .12,499 ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ .14,499 ஆகவும் இருந்தது. தற்போது, விலை உயர்வுக்குப் பின்னர் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு இப்போது வெறும் ரூ .12,999 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கும் ரூ.500 அதிகரிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வுக்கு பின்னர் இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.14, 999 என்ற புதிய விலையில் அமேசான் மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான Mi.com அக்வா கிரீன், ஃப்ரோஸ்ட் ஒயிட் மற்றும் நிழல் கருப்பு வண்ண விருப்பங்களில் பிரதிபலிக்கிறது.
சியோமி நிறுவனம் குறுகிய காலத்திற்குள் அதன் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் விலையை மூன்று முறை அதிகரித்துள்ளது. இதற்கான சரியான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இருப்பினும், இந்த ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனிற்கான மவுசு அதிகம் இருப்பதனால், இந்த விலை அதிகரிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எது எப்படியாக இருப்பினும், ஒரு நல்ல ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 அதிகரிப்பு என்பது பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.


Click it and Unblock the Notifications