இந்த தேதியை குறிச்சு வச்சிக்கோங்க! ஒரே நாளில் 6 அறிமுகம்! 1 ஸ்மார்ட் வாட்ச், 1 லேப்டாப், 1 இயர்பட்ஸ், 3 போன்!
ஒரு ஸ்மார்ட் வாட்ச், ஒரு லேப்டாப், ஒரு இயர்பட்ஸ், மூன்று ஸ்மார்ட்போன்கள் என ஒரே நாளில் மொத்தம் 6 புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யப்போவது ரெட்மி (Redmi) தான். இவைகள் எந்த தேதியில் வெளியாகவுள்ளன? என்னென்ன மாடல்கள் அறிமுகமாகவுள்ளன? இதோ விவரங்கள்:
சீன பிராண்ட் ஆன ஷாவ்மீயின் துணை நிறுவனமான ரெட்மி வருகிற நவம்பர் 29 ஆம் தேதியன்று ஒரு வெளியீட்டு நிகழ்வை நடத்தவுள்ளது. அந்நிகழ்வில் தான் ரெட்மியின் 3 புதிய கே சீரீஸ் ஸ்மார்ட்போன்களுடன், புதிய ரெட்மி வாட்ச, புதிய ரெட்மி புக் மற்றும் புதிய ரெட்மி பட்ஸ் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

முன்னதாக இந்நிகழ்வில் ரெட்மி கே70 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் மட்டுமே அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சீரீஸின் கீழ் ரெட்மி கே70 (Redmi K70), ரெட்மி கே70இ (Redmi K70E) மற்றும் ரெட்மி கே70 ப்ரோ (Redmi K70 Pro) என் மொத்தம் 3 மாடல்கள் வெளியாக இருந்தது.
இதற்கிடையில் நவம்பர் 29 ஆம் தேதி நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் ரெட்மி கே60 சீரீஸ் உடன் சேர்த்து ரெட்மி வாட்ச் 4 (Redmi Watch 4), ரெட்மி புக் 16 2024 மாடல் (Redmi Book 16 2024) மற்றும் ரெட்மி பட்ஸ் 5 ப்ரோ (Redmi Buds 5 Pro) ஆகியவைகளும் அறிமுகமாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி வாட்ச் 4 ஆனது ரெட்மி வாட்ச் 3 மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். வெளியான டீஸர் புகைப்படங்களின் வழியாக இது மல்டி-பேண்ட் விருப்பங்கள் (Multiple band options) மற்றும் பல வகையான வாட்ச் ஃபேஸ்களுடன் (Multiple watch faces) வரும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
மேலும் ரெட்மி வாட்ச் 4-இல் பிளாக் டயலுடன் சதுர வடிவ டிஸ்பிளே (Square-shaped display with black dial), யுஐ வழியிலான நேவிகேஷனிற்காக (Navigation through the UI) பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பட்டன் மற்றும் ஹார்ட் ரேட், ஸ்டெப்ஸ் கவுண்ட், கலோரிஸ் உள்ளிட்ட உடல்நல கண்காணிப்புகள் போன்றவைகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

ரெட்மியின் புதிய லேப்டாப் ஆன ரெட்மி புக் 16 2024 மாடலானது 47வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை (47W Fast Charging Support) கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரெட்மி பட்ஸ் 5 ப்ரோ இயர்பட்ஸ் ஆனது ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் ஆதரவுடன் (Active noise cancellation support) வருவது உறுதிசெய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு அறிமுகமான பட்ஸ் 4 ப்ரோவின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
கடைசியாக உள்ள ரெட்மி கே70 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது நவம்பர் 29 நடக்கும் வெளியீட்டு நிகழ்வின் சிறப்பம்சமாக இருக்கும். முன்னரே குறிப்பிட்டபடி இந்த சீரிஸின் கீழ் ரெட்மி கே70, ரெட்மி கே70 ப்ரோ, ரெட்மி கே70இ என மொத்தம் 3 மாடல்கள் அறிமுமாகும்.

டாப்-ஆஃப்-லைன் ரெட்மி கே70 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 SoC) உடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள ரெட்மி கே70இ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 8300 அல்ட்ரா சிப்செட் (MediaTek Dimensity 8300-Ultra SoC) உடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட 6 புதிய ரெட்மி தயாரிப்புகளில் எதெல்லாம் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்பது பற்றிய போதுமான விவரங்கள் இல்லை. இருப்பினும் கண்டிப்பாக ரெட்மி கே70 சீரிஸ் அதே பெயரின் கீழ் இந்தியாவிற்கு வராது. மாறாக போக்கோ பிராண்டின் கீழ் ரீபிராண்டட் வெர்ஷனாக (Rebranded Version), அதாவது மறுபெயரிடப்பட்ட மாடல்களாக இஅறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








