Home
News

இது போனா இல்லை லம்போர்கினி கார்-ஆ! மிரட்டிவிட்ட Xiaomi.. போட்டிபோட்டு வாங்கும் வாடிக்கையாளர்கள்.. என்ன மாடல்?

சியோமி (Xiaomi) நிறுவனம் ரெட்மி K70 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி ஸ்குவார்டா கோர்ஸ் எடிஷன் (Redmi K70 Pro Automobili Lamborghini Squarda Corse Edition) என்ற சிறப்பு எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

ஆடவர்களின் கனவு கார் என்றால் அது லம்போர்கினி (Lamborghini) தான். இந்த சொகுசு காரை வாங்க பல கோடிகள் செலவழிக்க வேண்டியதுள்ளது. இதனால், எல்லோராலும் இந்த காரை வாங்க முடியாது. இந்த காரை வெறும் கனவாக எண்ணிவந்தவர்களின் கரங்களில் லம்போர்கினி ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனை கொண்டு சேர்க்க சியோமி நிறுவனம் முடிவு செய்துள்ளது போல் தெரிகிறது.

இது போனா இல்லை லம்போர்கினி கார்-ஆ! மிரட்டிவிட்ட Xiaomi.. என்ன மாடல்?

இதன் சாட்சியாக, சியோமி நிறுவனம் அதன் ரெட்மி பிராண்டின் கீழ் புதிதாக ரெட்மி K70 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி ஸ்குவார்டா கோர்ஸ் எடிஷன் (Redmi K70 Pro Automobili Lamborghini Squarda Corse Edition) என்ற சிறப்பு எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை சீன ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இப்போது விற்பனைக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த புதிய ரெட்மி K70 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி ஸ்குவார்டா கோர்ஸ் எடிஷன் (Redmi K70 Pro Automobili Lamborghini Squarda Corse Edition) ஸ்மார்ட்போன் பற்றிய முழு விபரம் மற்றும் விலை பற்றிய தகவலை இப்போது பார்க்கலாம். இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் சாதனம் லம்போர்கினி எஸ்ஸேன்சா SCV12 ரேஸிங் கார் (Lamborghini Essenza SCV12 Racing Car) மாடலின் தழுவலை கொண்டுள்ளது.

இந்த ஸ்பெஷல் எடிஷன் redmi K70 ப்ரோ ஸ்மார்ட்போன் Y ஷேப் லைன்களுடன் கூட பாடி வடிவமைப்பை கொண்டுள்ளது. இதில் ஆட்டோமொபிலி லம்போர்கினி ஸ்குவார்டா கோர்ஸ் லோகோவை (Automobili Lamborghini Squadra Corse Logo) கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு ஸ்பெஷல் எடிஷன் என்பதனால், இதில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.

இது போனா இல்லை லம்போர்கினி கார்-ஆ! மிரட்டிவிட்ட Xiaomi.. என்ன மாடல்?

இது 24ஜிபி ரேம் (24GB RAM) மற்றும் 1TB ஸ்டோரேஜ் (1TB Storage) உடன் வருகிறது. இது 98% மேம்படுத்தப்பட்ட AI பெர்பார்மென்ஸ் அம்சத்துடன் வருகிறது. இது 2,247,800 மதிப்பெண்களை கொண்டுள்ளது. இது ரேஜ் என்ஜின் 3.0 ஏஐ பெர்பார்மென்ஸ் (Rage Engine 3.0 AI performance) அம்சத்துடன் வருகிறது. இது 2K ஹை-பெர்பார்மென்ஸ் டிஸ்பிளேவுடன் வருகிறது. இது ஐஸ் கூலிங் யூனிட் அம்சத்துடன் வருகிறது.

இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே 2K தரத்தில் 4000 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் மிகவும் பிரகாசமான டிஸ்பிளேவாக வருகிறது. இது 3840Hz ஹை-ஃபிரீவென்சி PWM டிம்மிங் அம்சத்துடன் வருகிறது. கூடுதலாக, இந்த சாதனம் சியோமி கிங்ஷான் கண் பாதுகாப்பு அம்சத்துடன் வருகிறது. ரெட்மி K70 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி ஸ்குவார்டா கோர்ஸ் எடிஷன் ரூ.3,82,366 விலையில் சீனாவில் விற்பனையாகிறது.

ரூ.3 கோடி செலவில் லம்போர்கினி வாங்க முடியாதவர்கள் இந்த ரெட்மி K70 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி ஸ்குவார்டா கோர்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை ரூ.3 லட்சம் விலையில் வாங்கலாம். லம்போர்கினி ரசிகர்களுக்கு இது ஒரு அற்புதமான சான்ஸ்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi K70 Pro Automobili Lamborghini Squarda Corse Edition Smartphone Goes On Sale In China
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X