காத்திருப்பு வீண் போகல: அறிமுகமானது Redmi K60 சீரிஸ்: ஏழை டூ பணக்காரர்கள் வரை அனைவருக்கும் ஒன்னு உறுதி!

|

சைலண்டாக இருந்த ரெட்மி நிறுவனம் மேம்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அது ரெட்மி கே60 ப்ரோ ஸ்மார்ட்போனாகும். Redmi K60 Pro ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி மற்றும் 50-மெகாபிக்சல் Sony IMX800 பிரதான கேமராவைக் கொண்டுள்ளது.

Redmi K60 Series

Redmi K60 Series

ரெட்மி நிறுவனம் Redmi K60 Series ஸ்மார்ட்போனை செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்துள்ளது. Xiaomi-க்கு சொந்த பிராண்டான ரெட்மி நிறுவனம் கே60 சீரிஸ் இன் கீழ் மூன்று மாடல்களை அறிமுகம் செய்திருக்கிறது. அது ரெட்மி கே60, ரெட்மி கே60 ப்ரோ மற்றும் ரெட்மி கே60இ ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் உலகளாவிய கிடைக்கும் தன்மை குறித்து எந்த ஒரு தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை.

6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே

6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே

Redmi K60 தொடரில் இடம்பெற்றுள்ள Redmi K60 மற்றும் Redmi K60 Pro ஸ்மார்ட்போன்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 சிப்செட் மூலம் இயக்கப்படுகின்றன. அதேபோல் Redmi K60E ஆனது MediaTek Dimensity 8200 SoC மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்களில் 2K தீர்மானம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவு கொண்ட 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

Redmi K60 Pro விலை

Redmi K60 Pro விலை

Redmi K60 Pro, Redmi K60, Redmi K60E விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், ரெட்மி கே60 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட வேரியண்ட் இன் விலை CNY 3,299 (தோராயமாக ரூ.40,000) என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் இதன் டாப் ஆஃப் லைன் வேரியண்ட் ஆன 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 4,599 (தோராயமாக ரூ.55,000) ஆக இருக்கிறது.

Redmi K60, Redmi K60E விலை

Redmi K60, Redmi K60E விலை

Redmi K60 விலை குறித்து பார்க்கையில், இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 2,499 (தோராயமாக ரூ.30,000) ஆகவும் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை CNY 3,599 (சுமார் ரூ.43,000) ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

Redmi K60 Pro மற்றும் Redmi K60 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் டிசம்பர் 31 முதல் சீனாவில் விற்பனைக்கு கிடைக்கும்.

Redmi K60E ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 2,199 (தோராயமாக ரூ.26,000) ஆகவும் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 2,799 (தோராயமாக ரூ.33,000) ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

Redmi K60 Pro சிறப்பம்சங்கள்

Redmi K60 Pro சிறப்பம்சங்கள்

Redmi K60 Pro சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் 6.67 இன்ட் 2K (1,440x3,200 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது HDR10+, 120Hz ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் 480 ஹெர்ட்ஸ் டச் மாதிரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 SoC மூலம் இயக்கப்படுகிறது.

50 எம்பி Sony IMX800 பிரதான சென்சார்

50 எம்பி Sony IMX800 பிரதான சென்சார்

Redmi K60 Pro ஸ்மார்ட்போனானது டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. OIS ஆதரவுடன் கூடிய 50 எம்பி Sony IMX800 பிரதான சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் இதில் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் இடம்பெற்றிருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இதில் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 மூலம் இயக்கப்படுகிறது.

Redmi K60 சிறப்பம்சங்கள்

Redmi K60 சிறப்பம்சங்கள்

Redmi K60 ஸ்மார்ட்போனின் பெரும்பாலான அம்சங்கள் ப்ரோ மாடலை போன்றே இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது Snapdragon 8+ Gen 1 SoC மூலம் இயக்கப்படுகிறது. இதில் 64 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி 67 வாட்ஸ் வயர்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டிருக்கிறது.

Redmi K60E சிறப்பம்சங்கள்

Redmi K60E சிறப்பம்சங்கள்

Redmi K60E ஆனது ரெட்மி K60 ப்ரோ போன்றே பெரும்பாலான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 8200 SoC மூலம் இயக்கப்படுகிறது. OIS ஆதரவுடன் கூடிய 48 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. அதேபோ் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 5500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi K60 Series Smartphone Launched at Budget, Mid Range and Premium Price: Specs Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X