ஸ்மார்ட்போன் சூட்டை குறைக்கும் உலகின் முதல் கூலிங் கேஸ்.! இது சாதா மொபைல் கேஸ் இல்லை.!

|

உங்களுக்கு மொபைல் கேஸ் (mobile case) தெரிஞ்சுருக்கும்.. சார்ஜ்ர் கேஸ் (charger case) தெரிஞ்சுருக்கும்.. கூலிங் கேஸ்-னா என்னானு தெரியுமா? தெரியாதுல, அதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். ஸ்மார்ட்போன்களில் (smartphone) உருவாகும் அதிகப்படியான வெப்பத்தைக் கட்டுப்படுத்த பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட மொபைல் கேஸ் தான் இந்த கூலிங் கேஸ் (cooling case).

கூலிங் கேஸ் என்றால் என்ன? இது என்ன செய்யும்? இது எப்படித் தயாரிக்கப்படுகிறது? இதனால் என்ன பயன்? இதை வாங்கலாமா? வேண்டாமா? என்பது போன்ற தகவலை தான் பார்க்கப்போகிறோம். சியோமி (Xiaomi) நிறுவனம் நேற்று அதன் புதிய ஸ்மார்ட்போன் ஆனா Redmi K60 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இத்துடன், இந்த ஸ்மார்ட்போனுக்கான புதிய ஸ்மார்ட்போன் துணைக்கருவியையும் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன் சூட்டை குறைக்கும் உலகின் முதல் கூலிங் கேஸ்.!

இதில் தான் நிறுவனம் இந்த கூலிங் மொபைல் கேஸ் (Redmi K60 Official Cooling Case) ஆக்சஸரீஸ் கருவியை அறிமுகம் செய்துள்ளது. இது நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ வெப்ப குளிரூட்டும் கேஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், இப்படி ஒரு மொபைல் கேஸை நீங்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை.! ஸ்மார்ட்போனில் ஏற்படும் ஹீட்டிங் சிக்கலைக் (smartphone heating issues) குறைப்பதற்காகச் சந்தையில் பல கூலிங் கேட்ஜெட்கள் (gadgets) விற்பனை செய்யப்படுகிறது.

இவை அனைத்துமே ஒரு ரொடேட்டிங் பேன் (rotating fan) உடன் வருகிறது என்பதை நாம் அறிவோம். ஆனால், இங்கு நாம் பார்க்கப்போகும் இந்த கூலிங் கேஸ் அப்படி எந்தவிதமான ஃபேன்னும் இல்லாமல், பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒரு பொருளின் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனின் வெப்பத்தைக் கட்டுப்படுத்திக் குறைகிறது என்பது கவனிக்கத்தக்கது. சரி, இதைப் பற்றி நமக்கு என்ன தெரியும் என்பதை இப்போது பார்க்கலாம்.

நாங்களே இப்படி ஒரு ஆக்சஸரீஸை இப்போது தான் முதல் முறையாகக் கேள்விப்படுகிறோம். இதுவரை ஸ்மார்ட்போனுக்கான பல கூலிங் ஆக்சஸெரீகளை நாம் பார்த்திருக்கிறோம் - ஆனால், இந்த கூலிங் கேஸ் புதியதாக தெரிகிறது. இதை ரெட்மி நிறுவனம் முதல் முறையாக உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. Redmi K60-க்கான புதிய கூலிங் கேஸ், சாதனத்தின் வெப்பநிலையை 4 டிகிரி செல்சியஸ் (4 degrees celsius) வரை குறைப்பதாக நிறுவனம் கூறியுள்ளது.

ஸ்மார்ட்போன் சூட்டை குறைக்கும் உலகின் முதல் கூலிங் கேஸ்.!

வெளிவந்த தகவலின் படி, போனின் வெளிப்புற கவரை மேம்படுத்த, ஃபிளாக்ஷிப் போனின் அதே-பிரிவு வெப்ப தொழில்நுட்பத்தை ரெட்மி நிறுவனம் முதன்முறையாக இந்த போனில் பயன்படுத்தியுள்ளது. புதிய கலவைப் பொருளின் வெப்பநிலை திடநிலையிலிருந்து திரவ இரட்டை நிலைக்கு (composite material is changed from solid to liquid dual state) மாற்றப்படுகிறது. மேலும் வெப்பம் விரைவாகக் கடத்தப்படும்போது உண்மையான நீண்ட-செயல்பாட்டு வெப்பம் பரவுகிறது.

மொபைல் போனின் வெப்பநிலை அதிகரித்தவுடன், இந்த புதிய கலவைப் பொருள் விரைவாக வெப்பத்தை உறிஞ்சி உருகி, தொலைபேசியின் உச்ச வெப்பநிலையைக் குறைக்கிறது. மொபைல் போன்கள் விரைவாக குளிர்ச்சியாவதற்கும், அதிக ஆற்றல் வெளியீட்டைப் பராமரிப்பதற்கும், கேம்கள் (games) மற்றும் வீடியோக்கள் (videos) போன்ற அதிக-லோடிங் காட்சிகளில் வசதியாக இருப்பதற்கும், திறமையான திட-திரவமானது வெப்பத்தைச் சிதறடிக்கும் வகையில் விநியோகிக்கிறது என்று நிறுவனம் கூறியுள்ளது.

இது மொபைல் போன்களுக்கான "போனஸ் பேட்ச்" (bonus patch) போன்றது. ரெட்மி மொபைல் போனின் ஃபியூஸ்லேஜின் (fuselage) பின்புறம் ஒரு மணிநேர சோதனைக்குப் பிறகு 4 டிகிரி செல்சியஸ் குளிர்கிறது. அதன் ஐஸ் சென்சிங் வெப்ப பாதுகாப்பு உறை (ice-sensing heat protection cover) காரணமாக, இது போனை உண்மையிலேயே விரைவாகக் குளிர்விக்கிறது. Xiaomi Mall இல் உள்ள ஐஸ் சென்சிங் வெப்ப பாதுகாப்பு கேஸின் விலை CNY 79 அல்லது சுமார் $11 ஆகும். இந்திய மதிப்பில் இதன் விலை ரூ. 910 ஆகும்.

Best Mobiles in India

English summary
Redmi K60 Official Cooling Case Launched With Smartphone Can Cool Device By 4 Degrees

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X