ரெட்மி கே50 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
ரெட்மி நிறுவனம் சீனாவில் புதிய ரெட்மி கே50 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அதிநவீன அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. அதேபோல் விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த ரெட்மி கே50 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ரெட்மி கே50 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.

ரெட்மி கே50 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.67-இன்ச் Samsung-made OLED 2K டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு டால்பி விஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், கொரில்லா கிளாஸ் விக்டஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ரெட்மி கே50 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4என்எம் மீடியாடெக் Dimensity 9000 SoC சிப்செட் வசதி உள்ளது. பின்பு MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றுதான்
கூறவேண்டும்.

ரெட்மி கே50 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128/256ஜிபி/512ஜிபி மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

ரெட்மி கே50 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 100எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ரெட்மி கே50 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் பல சென்சார் ஆதரவுகளுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி, வைஃபை 6, புளூடூத் வி5.3, என்எப்சி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி கே50 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் ரூ.35,900-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








