Home
News

ரெட்மி கே 40, ரெட்மி கே 40 ப்ரோ சிறப்பம்சங்கள் லீக்: கசிந்த அம்சத்திற்கே அமோக வரவேற்பு!

புதிய கசிவுகளின்படி, ரெட்மி கே 40 ப்ரோ ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 மூலம் இயக்கப்படலாம் எனவும் ரெட்மி கே 40 ஸ்னாப்டிராகன் 870 மூலம் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி கே 40, ரெட்மி கே 40 ப்ரோ சிறப்பம்சங்கள் லீக்: முழு விவரங்கள்!

சியோமி நிறுவனம் ரெட்மி பிராண்டின் கீழ் புதிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களுடன் வருகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் ரெட்மி கே 40 மற்றும் ரெட்மி கே 40 ப்ரோ ஆகியவை இருக்கும் என கூறப்படுகிறது.

டிப்ஸ்டர் மூலம் வெய்போவில் கசிந்த தகவலின்படி, இரண்டு ஸ்மார்ட்போன்களின் அறிமுக பக்கத்தின் ஸ்க்ரீன் ஷாட் கசிந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களை பிப்.,25 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்போவதை நிறுவனம் முன்னதாகவே உறுதிப்படுத்தியது.

இந்த ஸ்மார்ட்போன்கள் டீனாவில் காணப்பட்டுள்ளன. இது எம்ஐ 11 ஸ்மார்ட்போனை போன்ற ஒத்த கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ரெட்மி கே 40 ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கையில் இது 6.81 இன்ச் டிஸ்ப்ளே, 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படும் என தெரிகிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதியுடன் வரும் எனவும் கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு இருக்கிறது. இது 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 13 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் நான்காம் நிலை கேமரா ஆகியவை உள்ளன.

முன்பக்கத்தில் 30 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருக்கும் என கூறப்படுகிறது. முன்புறத்தில் மையப்படுத்தப்பட்ட பஞ்ச் ஹோல் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

ரெட்மி கே40 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இது ஸ்னாப்டிராகன் 870 மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கடந்தாண்டு ஸ்னாப்டிராகன் 865 ப்ளஸ் செயலியின் மாறுபட்ட பதிப்பாக இருக்கிறது.

ரெட்மி கே 40 குறித்து கசிந்த தகவலின்படி 6.81 இன்ச் டிஸ்ப்ளே, குவாட் கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது 13 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா என இரட்டை கேமரா அமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 6ஜிபி ரேம், 128ஜிபி சேமிப்பு வசதி, 4500 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்டவற்றுடன் வரும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Redmi K40, Redmi K40 Pro Specification Leaked: Here the Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X