Redmi K40 ஸ்மார்ட்போனின் அறிமுகம் ஒரு வழியாக உறுதியானது.. என்னவெல்லாம் இதில் எதிர்பார்க்கலாம்?
சியோமி நிறுவனத்திற்கு சொந்தமான ரெட்மி நிறுவனம் புதிய ரெட்மி கே 40 (Redmi K40) ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி ஒரு வழியாக இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அட்டகாசமான புதிய ரெட்மி கே 40 ஸ்மார்ட்போன், வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படும் என்று ரெட்மி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது .

ரெட்மி பொது மேலாளர் லு வெய்பிங், வெய்போவில் பகிர்ந்த வெளியீட்டு போஸ்டரில் ரெட்மி கே 40 ஸ்மார்ட்போனுக்கான வெளியீட்டுத் தேதியைப் பிப்ரவரி 25 என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இந்த போஸ்டரில் ரெட்மி K40 ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் குறித்த எந்த தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ரெட்மி கே 40 ப்ரோவும் செயல்பாட்டில் உள்ளது.

ஆனால், ரெட்மி கே 40 ப்ரோ ஸ்மார்ட்போன், இந்த ஆண்டின் பிற்பகுதியில் நிச்சயமாக அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ரெட்மி கே 40 அடிப்படை மாடலுக்கு 2,999 யுவான் என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பின்படி தோராயமாக சுமார் ரூ. 34,000 விலை ஆகும். வெளியான லீக் தகவல் குறிப்பிடும் தகவல்களை வைத்து பார்க்கையில், புதிய ரெட்மி கே 40 ஸ்மார்ட்போனில் இந்த சிறப்பம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம்.

ரெட்மி கே 40 போனில் எதிர்பார்க்கப்படும் சில முக்கிய சிறப்பம்சங்கள், இது பஞ்ச்-ஹோல் நாட்ச் கொண்ட எஃப்.எச்.டி பிளஸ் டிஸ்பிளேவுடன் கூடிய 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சாப்ட்வேரை பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையாகக் கொண்ட MIUI 12.5 இயங்குதளத்துடன் வெளியாகும். இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வெளியாகும்.

இந்த சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், ஸ்னாப்டிராகன் 888, ஸ்னாப்டிராகன் 870, மற்றும் டைமன்சிட்டி 1200 ஆகிய மூன்று வெவ்வேறு சிப்செட்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி கே 40 ஸ்மார்ட்போன் பெரும்பாலும் 5 ஜி ஆதரவுடன் வரும். இந்த ஸ்மார்ட்போன் 4,000 எம்ஏஎச் பேட்டரி உடன் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவரும். ஸ்மார்ட்போனின் கேமரா விவரக்குறிப்புகள் தற்போது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications








