வரவேற்பு அமோகமா இருக்கும்: பிரத்யேக அம்சங்களோடு மலிவு விலையில் ரெட்மி கே 30 அல்ட்ரா!
ரெட்மி கே 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானத பிரத்யேக அம்சங்களோடு மலிவு விலை அறிமுகமாக்கப்பட்டுள்ளது.

ரெட்மி கே 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன்
ரெட்மி கே 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இதுகுறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்
சீன நிறுவனமான ரெட்மி அடுத்தடுத்து புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி இந்திய சந்தையில் தங்களுக்கான இடம்பிடித்து வருகின்றன. இந்த நிலையில் ரெட்மி நிறுவனத்தின் புதிய தொடரான ரெட்மி கே 30 தொடர் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரெட்மி கே 30 அல்ட்ரா சிறப்பம்சங்கள்
ரெட்மி கே 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள் அதிகமாகவே உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 64 எம்பி முதன்மை சென்சார் குவாட் கேமரா என அடுக்கக்கடுக்காக அம்சங்கள் உள்ளது.

டைமன்சிட்டி 1000+ செயலி
இதில் டைமன்சிட்டி 1000+ செயலி, 64 மெகாபிக்சல் கேமரா என பல அம்சங்களை கொண்டிருந்தாலும் மலிவு விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம், 8 ஜிபி ரேம் என இரண்டும் வேரியண்ட்களிலும் 128 ஜிபி சேமிப்பு 8 ஜிபி ரேமோடு 512 ஜிபி சேமிப்பு வசதியிலும் அறிமுகமாகிறது.

ஸ்மார்ட்போன் விலை
இந்த ஸ்மார்ட்போன் விலை அனைவரையும் கவரும் விதமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலையானது ரூ.21,500-க்கு இருக்கலாம் எனவும் அடுத்ததாக ரூ.23,500-க்கு இருக்கலாம் எனவும் 512 ஜிபி சேமிப்பு ரூ.27,000 ஆக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் விற்பனை
இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 13 ஆம் தேதி சீனாவில் விற்பனைக்கு வரும் எனவும் இதற்கான முன்பதிவு தொடங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது 6.77 அங்குல டிஸ்ப்ளே, 2400*1800 பிக்சல்கள் தீர்மானம் ஹெச்டிஆர் 10 ப்ளஸ் வேகமான புதுப்பிப்பு வீதம் ஆகியவற்றை கொண்டுள்ளது.

5ஜி ஆதரவு
இந்த ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் அம்சத்தோடு 5ஜி ஆதரவு உள்ளிட்டவைகளை கொண்டிருக்கும் இதில் 64 எம்பி கேமரா, 13 எம்பி செகன்ட்ரி கேமரா, 5 எம்பி மூன்றாவது கேமரா உள்ளிட்டவைகளை கொண்டுள்ளது.

4500 எம்ஏஹெச் பேட்டரி
ரெட்மி கே30 அல்ட்ரா ஸ்மாரட்போனில் 4500 எம்ஏஹெச் பேட்டரி 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 5 ஜி, வைபை, ப்ளூடூத் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுவதோடு இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையை ஒரு கலக்கு கலக்க இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மாரட்போன் இந்திய அறிமுகம் குறித்து தற்போதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications