பேச்சுக்கே இடமில்ல., கிட்டக்கூட வரமுடியாது- ரூ.12000க்கு கீழ் ரெட்மி 10ஏ, ரெட்மி 10சி: 50எம்பி டிரிபிள் கேமரா!

|

சியோமி நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. ரெட்மி 10ஏ மற்றும் ரெட்மி 10சி ஆகியவை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் சாதனமாகும். நிறுவனத்தின் புதிய இடைநிலை ஸ்மார்ட்போன் ஆனது 50 எம்பி முதன்மை சென்சார் கொண்ட மூன்று கேமரா அமைப்பு உட்பட பல்வேறு சிறந்த அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ரெட்மி 9 தொடரின் ரெட்மி 9ஏ உள்ளிட்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன. தொடர்ந்து ரெட்மி 10 தொடரில் இருக்கும் புதிய சாதனமும் பெரிதளவு வரவேற்பை பெற்றிருக்கின்றன.

இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள்

இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள்

சியோமி நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. ரெட்மி 10ஏ மற்றும் ரெட்மி 10சி ஆகியவை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் சாதனமாகும். நிறுவனத்தின் புதிய இடைநிலை ஸ்மார்ட்போன் ஆனது 50 எம்பி முதன்மை சென்சார் கொண்ட மூன்று கேமரா அமைப்பு உட்பட பல்வேறு சிறந்த அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ரெட்மி 9 தொடரின் ரெட்மி 9ஏ உள்ளிட்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன. தொடர்ந்து ரெட்மி 10 தொடரில் இருக்கும் புதிய சாதனமும் பெரிதளவு வரவேற்பை பெற்றிருக்கின்றன.

ரெட்மி 10ஏ, ரெட்மி 10சி சாதனம்

ரெட்மி 10ஏ, ரெட்மி 10சி சாதனம்

ரெட்மி 10ஏ, ரெட்மி 10சி சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்து வெளியான தகவல்களை பார்க்கலாம். ரெட்மி 10ஏ மற்றும் 10சி ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் சிப்செட் வசதியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியா, சீனா உள்ளிட்ட பிற உலக நாட்டு சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.12,000-க்கு குறைவாக இருக்கும் என அறிக்கைகள் தெரிவிக்கிறது. ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனானது 'Thunder' மற்றும் 'Light'உள்ளிட்ட மூன்று குறியீடு பெயர்களில் வரும் என கூறப்படுகிறது. அதேபோல் ரெட்மி 10சி ஸ்மார்ட்போனானது 'Fog', 'Rain' மற்றும் 'Wind' என்ற குறியீடு பெயர்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ரெட்மி 10ஏ மற்றும் ரெட்மி 10சி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்

ரெட்மி 10ஏ மற்றும் ரெட்மி 10சி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்

ரெட்மி 10ஏ மற்றும் ரெட்மி 10சி ஸ்மார்ட்போன்கள் அம்சங்கள் மற்றும் அறிக்கைகள் குறித்த தகவல்களை பார்க்கலாம். ரெட்மி 10ஏ மற்றும் ரெட்மி 10சி ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் பிரவில் சில சிறந்த அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்களின் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த கேமரா தொகுதி 50 எம்பி சாம்சங் ஐஸோசெல் எஸ்5 கேஜேஎன்1 சென்சார் அல்லது ஒம்னிவிஷன் ஓவி50சி சென்சார் உடன் வரும் என கூறப்படுகிறது. இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன்களின் பிற கேமரா லென்ஸ்கள் குறித்து பார்க்கையில், இதில் 8 எம்பி இரண்டாம் நிலை அல்ட்ரா வைட் கேமரா சென்சார் மற்றும் 2 எம்பி மூன்றாம் நிலை கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ரெட்மி 10ஏ மற்றும் ரெட்மி 10சி ஸ்மார்ட்போன்களின் விவரங்கள்

ரெட்மி 10ஏ மற்றும் ரெட்மி 10சி ஸ்மார்ட்போன்களின் விவரங்கள்

ரெட்மி 10ஏ மற்றும் ரெட்மி 10சி ஸ்மார்ட்போன்களின் விவரங்களை சியோமி இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன்களின் விவரங்களை நிறுவனம் விரைவில் வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வெளியான தகவல்களை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. ரெட்மி 10ஏ மற்றும் ரெட்மி 10சி ஆகியவை ரெட்மி 9ஏ மற்றும் ரெட்மி 9சி சாதனத்தின் மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இவை அனைத்தும் தகவல்களே என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்

ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்

ரெட்மி நிறுவனம் வரும் பிப்ரவரி 9-ம் தேதி ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் அசத்தலான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்த ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.43-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி

6.43-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி

ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 1080பிக்சல் தீர்மானம், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் எனப் பல்வேறு சிறப்பான
அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும். ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனில் Samsung HM2 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் 13எம்பி கேமரா ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.

ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் ஆதரவு

ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் ஆதரவு

புதிய ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் மிக வேகமாக செயல்படும். அதேபோல் கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கும் இந்த சிப்செட் மிக அருமையாக பயன்படும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே
இந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையக இருக்கும்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதி

5000 எம்ஏஎச் பேட்டரி வசதி

இந்த ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 11எஸ் மாடல். ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனில் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, ஐஆர் பிளாஸ்டர், ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ரெட்மி நோட் 11டி 5ஜி ஸமார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். இந்த ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Redmi Going to Launch Redmi 10A, Redmi 10C Smartphone at Budget Price: Expected Specs, Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X