கிழியுது சவுண்ட்.. மிரளுது ஆஃபர்.. Redmi Buds 5 விலை என்ன? எப்போது விற்பனை? ரெடியா இருங்க..
ரெட்மி (Redmi) நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ரெட்மி பட்ஸ் 5 (Redmi Buds 5) சாதனம் ஒருவழியாக இப்போது இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் 38 மணி நேர பிளேடைம் உடன் வருகிறது. இதன் விலை விபரங்களை பார்க்கலாம்.
Redmi Buds 5: சாதனம் இந்தியாவில் தற்போது அறிமுக சலுகையுடன் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய இயர்பட்ஸ் சாதனம் 12.4mm டைனமிக் டைட்டானியம் டிரைவர்ஸ் (12.4mm dynamic titanium drivers) உடன் வருகிறது. இந்த டிரைவர் அணைத்து பிரிக்கவென்சியிலும் பேலன்ஸ்டாக இயங்கும் சிறந்த ஆடியோ தரத்தை வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ் சாதனம் ஹைபிரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation - ANC) உடன் வருகிறது.

ரெட்மி பட்ஸ் 5 (Redmi Buds 5): இது டூயல் மைக் நாய்ஸ் ரிடக்ஷன் சப்போர்ட் போன்ற ஆதரவையும் கொண்டுள்ளது. இது பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் இன்னும் ஏராளமான சிறப்பம்சங்களை இந்த புதிய ரெட்மி பட்ஸ் 5 சாதனம் கொண்டுள்ளது. இந்த புதிய ரெட்மி பட்ஸ் 5 (Redmi Buds 5) இயர்பட்ஸ் சாதனத்தின் முழு அம்சம் மற்றும் விலை பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம்.
இந்த புதிய ரெட்மி பட்ஸ் 5 (Redmi Buds 5) சாதனம் ரூ.2,999 விலையில் வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் இந்தியாவில் வாங்க கிடைக்கிறது. இந்த புதிய ரெட்மி பட்ஸ் 5 (Redmi Buds 5) சாதனத்தை ரெட்மி நோட் 13 சீரிஸ் (Redmi Note 13) ஸ்மார்ட்போனுடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சிறப்பு சலுகை விலையாக Redmi Buds 5 வெறும் ரூ.2,499 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எங்கே வாங்கலாம்? அதேபோல், ரெட்மி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய ரெட்மி பேட் (Redmi Pad) உடனும் இந்த சிறப்பு சலுகை விலை பொருந்தும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த இயர்பட்ஸ் சாதனம் இப்போது பிளிப்கார்ட் (Flipkart), அமேசான் (Amazon), Mi.com, Mi homes மற்றும் சியோமி ரீடெய்ல் கடைகளில் வாங்க கிடைக்குமென்று நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ரெட்மி இயர்பட்ஸ் (Redmi earbuds) சாதனம் இப்போது பியூஷன் வைட், பியூஷன் பிளாக் மற்றும் பியூஷன் பர்பிள் என 3 நிறங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த சாதனம் 46dB ஹைப்ரிட் ANC உடன் ஆதரவுடன் வருகிறது. இதனால், 99.5 சதவீத பேக்ரவுண்ட் இரைச்சல் முற்றிலுமாக குறைக்கப்படுகிறது. இந்த சாதனம் ANC ஆதரவை கஸ்டமைஸ் செய்ய அனுமதிக்கிறது.
இதில் 3 விதமான கஸ்டமைசேஷன் இப்போது கிடைக்கிறது. இந்த டீப் நாய்ஸ் கேன்சலேஷன், பேலன்ஸ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் லைட் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற 3 ஆதரவை வழங்குகிறது. இந்த ரெட்மி பட்ஸ் 5 சாதனம் 3 ஆடியோ மோட்களை கூட ஆதரிக்கிறது. இதில் ஸ்டாண்டர்ட், என்ஹேன்ஸடு ட்ரிப்ளி மற்றும் என்ஹேன்ஸடு பாஸ் போன்ற ஆதரவை கொண்டுள்ளது.
இந்த சாதனம் 5 நிமிட பாஸ்ட் சார்ஜிங் உடன் 2 மணி நேர பிளே நேரத்தை வழங்குகிறது. மறுபுறம் இது சார்ஜிங் கேஸ் உடன் மொத்தமாக 38 மணி நேர பிளேபேக் நேரத்தை வழங்குகிறது என்று நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. புதிய இயர்பட்ஸ் சாதனத்தை வாங்க விரும்புவோர் இந்த சாதனத்தை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications