0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 5 நிமிடம் போதும்: Redmi அறிமுகம் செய்த பாஸ்ட் சார்ஜர்.!
தற்போது பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தில் செல்போன் நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்துகின்றன என்றே கூறலாம். சமீபத்தில் கூட ரியல்மி நிறுவனம் 10 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் ஆகும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. அதேபோல் ஒன்பிளஸ், விவோ போன்ற நிறுவனங்களும் பாஸ்ட் சார்ஜிங் வசதியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம்
இந்நிலையில் ரெட்மி நிறுவனம் 300 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து அசத்தி இருக்கிறது. அதாவது இந்த புதிய தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனை வெறும் ஐந்து நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக இந்த பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் பல்வேறு மக்களுக்குப் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.

ரெட்மி நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்போனை 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் ஐந்து நிமிடங்களுக்கு குறைவாகவே எடுத்துக் கொண்டது. குறிப்பாக 300 வாட்ஸ் இம்மார்டல் செகண்ட சார்ஜர் என அழைக்கப்படும் புதிய தொழில்நுட்பத்தை தான் ரெட்மி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது.
இருந்தபோதிலும் இந்த புதிய சார்ஜரின் தொழில்நுட்ப அம்சங்கள் பற்றி எந்த ஒரு தகவலும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் ரெட்மி நிறுவனம் 4100 எம்ஏஎச் பேட்டரி கொண்ட மாடிஃபை செய்யப்பட்ட ரெட்மி நோட் 12 டிஸ்கவரி ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யப்படும் வீடியோவை வெளியிட்டது.

குறிப்பாக இதற்கு வேண்டி 4300 எம்ஏஎச் பேட்டரிக்கு மாற்றாக 4100 எம்ஏஎச் பேட்டரி கொண்ட ரெட்மி நோட் 12 டிஸ்கவரி எடிஷன் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது. மேலும் அந்நிறுவனம் வெளியிட்ட வீடியோவில் ஸ்மார்ட்போன் 50 சதவீதம் வரை சார்ஜ் ஆக வெறும் 2 நிமிடங்கள் 11 நொடிகளையே எடுத்துக் கொள்கிறது.
மேலும் இந்த புதிய பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் பற்றிய இதர விவரங்களை ரெட்மி நிறுவனம் பின்னர் வெளியிடுவதாக அறிவித்துள்ளது. மேலும் சீனாவில் தற்போது விற்பனை செய்யப்படும் ரெட்மி நோட் 12 டிஸ்கவரி எடிஷன் ஆனது அதிவேக பாஸ்ட் சார்ஜிங் கொண்ட ஸ்மார்ட்போன் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த போன் 300 வாட்ஸ் வயர்டு சார்ஜ் மூலம் சார்ஜ் செய்யப்படும் காட்சிகள் தான் இணையத்தில் அதிக வைரலாகி உள்ளது.

குறிப்பாக ரெட்மி நிறுவனத்தின் பாஸ்ட் சார்ஜிங் வசதியில் அதிக பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதுபோன்ற பாஸ்ட் சார்ஜிங் வசதி மிகவும் பயனுள்ள வகையில இருக்கும் என்றே கூறலாம். அதேபோல் ரெட்மி நிறுவனம் விரைவில் ரெட்மி ஏ2 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த போனின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இப்போது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போன் அம்சங்கள்
ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி36 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

இந்த ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போன் டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே இந்த போன் 8எம்பி கேமராவுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. இந்த ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போன் 2ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








