ரூ.6,000 விலையில் இப்படி ஒரு அல்டிமே போன்-ஆ! Redmi A2 இன் புது Mobile விற்பனைக்கு ரெடி!
சியோமியின் (Xiaomi) துணை பிராண்ட்டான ரெட்மி (Redmi), கடந்த மாதம், ரெட்மி ஏ2 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதில் A2 தொடர் இரண்டு மாடல்களைக் கொண்டுள்ளது. அதில் Redmi A2 மற்றும் Redmi A2+ என்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இவை 2ஜிபி + 32ஜிபி ஸ்டோரேஜ், 2ஜிபி + 64ஜிபி மற்றும் 4ஜிபி + 64ஜிபி ஆகிய மூன்று வேரியண்ட் மாடல்களாக Redmi A2 அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இதுவரை, நிறுவனம் நாட்டில் 2ஜிபி + 32ஜிபி மற்றும் 4ஜிபி + 64ஜிபி வகைகளை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. ஆனால், Xiaomi இப்போது இதன் 2ஜிபி + 64ஜிபி மாடலை இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டுவரும் என்று அறிவித்துள்ளது.

சமீபத்திய அறிவிப்பின்படி, Redmi A2 போனின் 2ஜிபி + 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் வரும் ஜூலை 20 அன்று நாட்டில் விற்பனைக்கு வாங்க கிடைக்கும். Redmi A2 ஆனது பிரீமியம் லெதர் டெக்ஸ்ச்சர் ஃபினிஷ் மற்றும் ஆண்ட்ராய்டு 13 (Go Edition) உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் MIUI டயலருடன் வருகிறது. Redmi A2 ஆனது முதல் முறையாக ஸ்மார்ட்போன் வாங்குபவர்களை இலக்காகக் கொண்ட மலிவு விலை மாடலாகும்.
இது MediaTek Helio G36 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச் கொண்ட பெரிய டிஸ்ப்ளே பேனலை வழங்குகிறது. இது 6.2' இன்ச் கொண்ட HD+ உடன் 1600 × 720 பிக்சல் உடைய டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 400 nits பீக் பிரைட்னஸ், 120Hz டச் சாம்ப்ளிங் ரேட் உடன் வருகிறது. இது 2GB/4GB LPDDR4X ரேம் மற்றும் 32GB/64GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
இதில் பிரத்யேக மைக்ரோ-SD கார்டு ஸ்லாட் அம்சமும் உள்ளது. இது 8MP AI டூயல் கேமராவுடன் 5MP முன் கேமராவுடன் வருகிறது. இந்த சாதனம் 5000mAH பேட்டரியை 10W சார்ஜிங்குடன் பேக் செய்துள்ளது. சீ க்ரீன், அக்வா ப்ளூ மற்றும் கிளாசிக் பிளாக் நிறங்களில் வருகிறது. இதன் விலை பற்றி பேசுகையில், Redmi A2 இன் 2GB ரேம் + 64GB மாடல் ஜூன் 20 முதல் Mi Store மற்றும் Amazon வழியாக பிரத்தியேகமாக விற்பனைக்கு வரும்.
ரெட்மி ஏ2 ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை ரூ.6,299 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இதன் 2 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை ரூ.6,799 ஆக இருக்கிறது. இறுதியாக, புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை ரூ.7,999 ஆக இருக்கிறது. இந்த போனை வாங்க விரும்பினால் ஜூன் 20 ஆம் தேதியை மிஸ் செய்யாதீர்கள்.


Click it and Unblock the Notifications