ரூ.5,499 விலையில் வெறித்தனம்.. Flipkart வந்த Redmi A2.. 5G போன் வேண்டுமா? இந்த மாடலை பாருங்க..
சியோமி (Xiaomi) நிறுவனத்தின் பட்ஜெட் ஃபிரெண்ட்லி ஸ்மார்ட்போன் சாதனம் என்றால் அது ரெட்மி A2 (Redmi A2) சாதனம் தான். குறைந்த விலையில் டீசெண்டான அம்சங்களை இந்த மொபைல் பேக் செய்துள்ளது. இதை இப்போது ரூ.5499 விலையில் வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி பிராண்டின் A சீரிஸ் வரிசையில் வருகிறது. இது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இந்த ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட சில காலத்திலேயே இது அதிகம் விற்பனையான மாடலாக மாறியது. இந்தியாவில் இந்த சாதனம் முதலில் அமேசான் (Amazon) மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் (Mi.com) வழியாக மட்டும் கிடைத்தது.

ஆனால், இப்போது சியோமி நிறுவனம் இந்த மாடலை பிளிப்கார்ட் (Flipkart) தளத்திலும் கிடைக்கும் படி செய்துள்ளது. ஆம், இனி ரெட்மி A2 (Redmi A2) ஸ்மார்ட்போன் சாதனத்தை மக்கள் பிளிப்கார்ட் வழியாகவும் வாங்கலாம். இதுவொரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் (Entry Level Smartphone) சாதனம் என்பது குறிப்பிடத்தக்கது. இது என்ட்ரி லெவல் சாதனமாக இருந்தாலும் டீசெண்டான அம்சங்களை பேக் செய்துள்ளது.
ரெட்மி A2 (Redmi A2): இந்த ரெட்மி A2 (Redmi A2) ஸ்மார்ட்போன் சாதனம் 6.52" இன்ச் LCD டிஸ்பிளேவுடன் வருகிறது. இது HD+ ரெசொலூஷன் உடன் 400 நீட்ஸ் பிரைட்னஸ் உடன் வருகிறது. இது மீடியாடெக் ஹீலியோ ஜி36 சிப்செட் (MediaTek Helio G36 SoC) உடன் இயங்குகிறது. இது 2 வகையான ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் வருகிறது. இது android 13 கோ எடிஷன் (Android 13 Go Edition) இயங்குதளத்துடன் இயங்குகிறது.
இது 2ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் (2GB + 64GB Storage) உடன் ஒரு மாடலாகவும். இது 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் (4GB + 64GB Storage Variant) உடன் மற்றொரு மாடலாகவும் வருகிறது. இதன் கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இது 8MP AI கேமராவுடன் வருகிறது. இது 5000mAh பேட்டரி உடன் 10W சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது.

இது டூயல் சிம் இணைப்புடன் (dual-SIM support), 4ஜி (4G) நெட்வொர்க்கில் இயங்குகிறது. இது வைஃபை (WiFi), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), ஜிபிஎஸ் (GPS), க்ளோனஸ் (Glonass) மற்றும் BeiDou நேவிகேஷன் அம்சத்துடன் வருகிறது. இதன் விலை பற்றி பேசுகையில், இதன் 2ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.5,499 விலையில் வருகிறது.
இதன் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.6,799 விலையில் வருகிறது. இப்போது இந்த சாதனம் பிளிப்கார்ட் தளம், அமேசான் மற்றும் பிற ரீடைல் ஷாப்பிங் வழியாக கிடைக்கிறது. இது சீ க்ரீன் (Sea Green), அக்வா ப்ளூ (Aqua Blue), கிளாசிக் பிளாக் (Classic Black) நிறங்களில் வருகிறது. ஒருவேளை நீங்கள் 5ஜி போனை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் ரெட்மி 13C (Redmi 13C) மாடலை கருத்தில்கொள்ளலாம்.
ரெட்மி 13C 5ஜி (Redmi 13C 5G):ரெட்மி 13C சாதனம் (Redmi 13C) தான் தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலமாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் குறைந்த விலை 5ஜி மொபைல் சாதனமாகும். இது 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் பேஸ் வேரியண்ட் மாடல் ரூ.10,999 விலையில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








