இப்படி ஒரு ஸ்மார்ட்போனை யாரும் எதிர்பார்க்கல.! Redmi A1 Plus மலிவு விலையில் அறிமுகமா?
சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Xiaomi இன் துணை பிராண்ட்டான Redmi இப்போது இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் வரிசையில் பட்ஜெட் விலையில் Redmi A1 Plus என்ற சாதனத்தை நிறுவனம் Redmi 11 Prime மற்றும் Redmi 11 Prime 5G உடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது இப்போது உறுதியாகியுள்ளது. இந்த Redmi 11 Prime போன் ஒரு பட்ஜெட் மாடலாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Redmi A1 Plus என்ற மாடலை சியோமி இந்தியாவில் அறிமுகமாகிறதா?
சியோமியின் ரெட்மி பிராண்ட் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி இந்தியாவில் Redmi 11 Prime 4G மற்றும் 5G மாடல்களை அறிமுகப்படுத்துகிறது என்பது சமீபத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதே நிகழ்வில், Redmi A1 Plus என்ற மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யவிருக்கிறது என்ற டீஸ் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. Xiaomi இந்த அறிவிப்பை அதன் சமூக வலைத்தள சேனல் மூலம் வெளியிட்டுள்ளது.

சியோமி வெளியிட்ட டீசரில் என்ன இருக்கிறது?
சியோமி நிறுவனம் பகிர்ந்துள்ள டீசர் தகவலின் வரவிருக்கும் Redmi A1 Plus ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் ஒட்டுமொத்த தோற்றமும் தெளிவாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்னதாக, Mi ஸ்டோரில் உள்ள மைக்ரோ சைட் இந்த போனின் விபரங்களை லைவ் செய்துள்ளது. இது Xiaomi Redmi A1 இன் சில முக்கிய சிறப்பம்சங்களை வெளிப்படுத்தியுள்ளது.

ரெட்மி A1 பிளஸ் MediaTek சிப்செட் உடன் வெளிவருமா?
சியோமி அறிமுகம் செய்யத் தயாராகும் புதிய Redmi A1 Plus ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்று பார்க்கலாம். ரெட்மி A1 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது MediaTek சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பதை நிறுவனத்தின் மைக்ரோ சைட் வெளிப்படுத்துகிறது. Xiaomi நிறுவனம் குறிப்பிட்டுச் சரியான சிப்செட் விவரங்களை அந்த சைடில் பதிவிடவில்லை. ஆனால், முந்தைய பெஞ்ச்மார்க் தகவல் இது MediaTek Helio A22 சிப்செட் உடன் வெளிவரும் என்று பரிந்துரைக்கிறது.

Redmi A1 Plus மூன்று நிறங்களில் வெளியாகுமா? உறுதியா?
புதிய ரெட்மி A1 பிளஸ் ஸ்மார்ட்போன் க்ரீன், ப்ளூ மற்றும் பிளாக் போன்ற மூன்று வண்ண விருப்பங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை சியோமியின் மைக்ரோ சைட் தெளிவாக வெளிப்படுத்துகிறது. இந்த மூன்று மாடல்களும் சிக்-லெதர் லுக் உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த Redmi A1 Plus ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியை பேக் செய்யுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி A1 பிளஸ் ஸ்மார்ட்போன் கேமரா மற்றும் டிஸ்பிளே விபரம்
இந்த ரெட்மி A1 பிளஸ் ஸ்மார்ட்போன் டூயல் ரியர் கேமரா அம்சத்துடன் வருகிறது. இது டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ் உடன் வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேவுடன் சிங்கிள் செல்பி கேமராவுடன் வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் HD+ குவாலிட்டி உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முழு HD+ டிஸ்பிளேவுடன் வராது என்று முந்தைய லீக் தகவல் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

சியோமி இந்த போனை என்ன விலையில் அறிமுகம் செய்யவிருக்கிறது?
புதிய ரெட்மி A1 பிளஸ் ஸ்மார்ட்போன் மற்ற Xiaomi சாதனங்களைப் போலவே வலது விளிம்பில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர்களைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை வழங்காது என்று கருதுகிறோம். காரணம், மைக்ரோ சைட் தகவலில் உள்ள படங்களில் எங்கும் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை காண்பிக்கவில்லை. இந்த ரெட்மி A1 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.9,990 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications